இறைவன் மேல பாரத்த போட்டு களத்துல இறங்கும் ஜெயம் ரவி… இந்த ரீலும் அறுந்து போகாம இருந்தா சரிதான்…

Published on: September 16, 2023
jeyam ravi
---Advertisement---

ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் இவரது சகோதரரான மோகன்ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் இணைந்து சதா நடித்திருந்தார். இவரின் முதல் படமே இவருக்கு வெற்றியை பெற்று தந்தது.

பின் இவர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படங்களின் மூலம் மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். இவரது சகோதரர் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் தனி ஒருவன். இத்திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.

இதையும் படிங்க:வேறலெவல் வெறித்தனம்!.. ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர்!. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ டிரெய்லர் வீடியோ…

இபப்டத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான படபிடிப்புகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. மேலும் இவர் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் நல்ல வசூலையும் பெற்றது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் நடித்த அகிலன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தினை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கினார். மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிசந்திரன் போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு பெரும் தோல்வியை தந்தது.

இதையும் படிங்க:இந்த பிரபல நகைச்சுவை நடிகரின் பேரன்தான் ஜெயம் ரவியா? இது தெரியாம போச்சே!..

இப்பட தோல்விக்கு பின் இவரின் பல படங்கள் வெளிவராமலே இருந்தன. சில படங்களின் படபிடிப்பே நின்று இருந்தன. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி இந்த ஆண்டே இவரின் மூன்று திரைப்படங்களை வெளிவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

அதன்படி ஐ.அஹமத் இயக்கத்தில் ஜெயம்ரவி மற்றும் நயன் நடிக்கும் படமான இறைவன் இந்த மாதம் வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியான படம்தான் தனி ஒருவன். இப்பட வெற்றியை தொடர்ந்து இறைவன் படத்திலும் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க:யுத்தத்தை விட ரத்தத்துக்குத்தான் அதிக பவர்! ஒரே நிமிஷத்துல தட்டி தூக்கிய லோகேஷ்! பரிதவிக்கும் ‘ரஜினி170’

இப்படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி மற்றும் இயக்குனர் ராஜேஷ் இணையவிருக்கும் ஜெயம் ரவியின் 30வது படம் வரும் நவம்பர் மாதம் வெளிவரவிருக்கிறது. அதன்பின் இவரின் 31வது படமான சைரன் திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளனர். அகிலன் படத்தின் மூலம் பெரும் தோல்வியை சந்தித்த ஜெயம் ரவிக்கு இப்படங்கள் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.