Cinema News
ரஜினி பால் போட்டா பேட்டை தூக்கிட்டு ஸ்டம்பை காட்ட மாட்டேன்!.. தலைவர் 171 பற்றி பேசிய கமல்!..
சைமா விருது விழா வழங்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பாடகர் என இரு விருதுகள் விக்ரம் படத்திற்காக வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், தனது பேசும் படம் ரீ ரிலீஸ் குறித்தும் அறிவித்திருந்தார் கமல்ஹாசன்.
மேலும், தனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே உள்ள நட்பு குறித்தும் தலைவர் 171 படம் பற்றியும் மனம் திறந்து கமல் பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அடி மேல விழும் அடி!.. ஆடிப் போய் கிடக்கும் வி எழுத்து நடிகர்.. ஹாட்ரிக் தோல்வினா தாங்க முடியாதே!..
துபாயில் நடைபெற்ற சைமா 2023 திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளை வென்று மாஸ் காட்டியது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி, அனிருத் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விக்ரம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியும் பத்தல பத்தல பாடலை பாடியும் அசத்திய கமல்ஹாசனுக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை பெற்ற கமல்ஹாசன் மேடையில் பேசும் போது, தலைவர் 171 பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: இதே டிரெஸ்ஸோட பிக் பாஸுக்கு வாங்க!.. தர்ஷாவுக்குத்தான் எங்க ஒட்டுமொத்த ஓட்டும்.. சம்பவம் அந்த மாதிரி!..
அதற்கு பதில் அளித்த கமல் என்னோட ரசிகன் லோகேஷ் கனகராஜ் என் நண்பரை வைத்து படம் இயக்குவது எனக்குத்தான் உண்மையாகவே பெருமையான தருணம் என்றார். உடனே லோகேஷ் கனகராஜ் கீழே சீட்டில் இருந்து எழுந்து கையெடுத்துக் கும்பிட்டார்.
எங்களுடைய நட்பு ரொம்ப காலமாக நீடித்து வருகிறது. அதற்காக, ரஜினி பால் போட்டா நான் பேட்டை தூக்கிட்டு ஸ்டம்ப்பை காட்டி அவுட் ஆக மாட்டேன்.. அந்த போட்டி வேற.. அது ஆரோக்கியமான போட்டி.. நட்பு என்பது வேறு, ஒருத்தர் காலை ஒருத்தர் இடறி விட்டுக் கொண்டு விளையாட மாட்டோம் என்று பேச அரங்கமே அதிர்ந்தது.