லோகேஷின் தம்பியா இந்த பிரபல நடிகரின் வாரிசு? என்னப்பா சொல்றீங்க? சீக்ரெட்டை பகிர்ந்த நடிகர்

Published on: September 20, 2023
loki
---Advertisement---

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு சூறாவளி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் வந்தாலே எட்டுத்திக்கும் பறக்கும் அளவுக்கு தன் படங்களின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். பேச்சுக்கு இடமே இல்லை. இரத்தம்தான் ஒரே தீர்வு என்பது மாதிரிதான் இவருடைய கதைகள் அமைந்து வருகின்றன.

ரசிகர்களும் அதைதான் விரும்புகிறார்கள். அதனாலேயே இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக லோகேஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விஜயின் லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: தலப்பாக்கட்டியை சீண்டுகிறாரா நயன்தாரா?.. அடுத்த படத்தின் பெயரை பார்த்தீங்களா!..

அதனைஅடுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கிறார். படத்தின் பூஜையே இன்னும் போடாத நிலையில் ரஜினி-லோகேஷ் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்கு போனாலும் ரஜினி 171 அப்டேட்டை கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் லோகேஷை பற்றி சில தகவல்களை பிரபல நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா கூறியிருக்கிறார். தம்பி ராமையாவுக்கு உமாபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். இவரும் ஒரு நடிகர் ஆவார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய போது மகள் செய்த காரியம்? அப்படிப்பட்டவரா தற்கொலைக்கு முயன்றார்?

லோகேஷை தன் மூத்த மகன் என்றே தம்பி ராமையா கூறியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மகன் உமாபதிக்கு ஒரு அண்ணனாகவே லோகேஷ் எல்லாவற்றையும் செய்து வருகிறாராம். அதாவது தம்பி ராமையா சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வரும் போது உமாபதி எங்கே என்று அவர் மனைவியிடம் கேட்டால் லோகேஷ் அழைத்தார். அதனால் அங்கு போயிருக்கிறான் என்றுதான் எப்பொழுது கூறுவாராம்.

அந்தளவுக்கு தம்பி ராமையா மகனுக்கும் லோகேஷுக்கு இடையே ஒரு நெருக்கமான உறவு இருந்து வருகிறதாம். அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் உமாபதி. அந்த நிகழ்ச்சியை ஆக்‌ஷனுக்காகவே லோகேஷ் பார்த்து வருவாராம். அப்பொழுதுதான் உமாபதியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது லோகேஷிற்கு. அதிலிருந்தே இருவரும் அண்ணன் தம்பிகளாகவே பழகி வருகிறார்களாம்.

இதையும் படிங்க: அனிருத்துக்கே ஆப்படிச்சிடுவாரு போல!.. விக்னேஷ் சிவனுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கா.. எல்லாம் நயன் செயல்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.