Connect with us

Cinema News

என்ன பார்த்தா அப்படியா தெரியுது!.. மார்க் ஆண்டனி டைரக்டரை கிட்டவே சேர்க்கல.. எஸ்.ஜே. சூர்யா பேச்சு!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்ற வருகிறது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மார்க்கண்டே திரைப்படத்தை தான் மிஸ் பண்ணி இருப்பேன் என உருக்கமாக பேசிய காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எப்போதுமே செம்ம எனர்ஜியுடன் என்னிடம் வந்து கதை சொல்லுவார். நல்லா எனர்ஜியா கதை சொல்றீங்க, ஆனா இது எனக்கு செட் ஆகுமா தெரியல என சில படங்களை தவிர்த்து விட்டேன்.

கடைசியா மார்க் ஆண்டனி திரைப்படத்தை உருவாக்கப் போகிறேன் என்றும் விஷால் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சார் என்று கூறினார். ரொம்ப நல்ல விஷயம் பெரிய நடிகர் வச்சு எடுக்குறீங்க நல்லா பண்ணுங்க என்றேன்.

இதையும் படிங்க: லியோவுக்கு 4 மணி ஷோ கண்டிப்பா கிடைக்கும்!.. அட.. அந்த பிரபலமே முழு நம்பிக்கையோடு சொல்றாரே!..

உங்களுக்கும் இந்த படத்துல ஒரு ரோல் இருக்கு சார் அப்படின்னு சொன்னாரு.. சரி என்ன ரோல் என்று கேட்டா.. நல்ல பழுத்த பழமான வயசான கேங்ஸ்டர் சார்னு சொன்னதை கேட்டதுமே டென்ஷன் ஆயிட்டேன். இப்போதான் வாழ்க்கையில ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிச்சிக்கிட்டு இருக்கேன். இப்ப போய் கிழவனா நடிக்க சொல்றீங்க அப்படின்னு அவரை வீட்டுக்கு அனுப்பிட்டேன்.

மாநாடு படத்தோட டப்பிங் நடந்துட்டு இருந்துச்சு அப்போ விஷால் எனிமி படத்துக்கு டப்பிங் அதே ஸ்டுடியோவில் பண்ணிட்டு இருந்தார். என்னை பார்த்தவர் ஆதிக்கிட்ட கதை கேட்டீங்களா, நல்ல கதை ஒருவாட்டி கேட்டு பாருங்க அப்படின்னு சொன்னாரு.

இதையும் படிங்க: நான் கூப்பிட்டு வரல!.. அம்பானி கூப்பிட்ட உடனே போறியா!.. நயன்தாரா மீது செம கடுப்பில் ஷாருக்கான்!..

இல்லங்க அது ரொம்ப வயசான கேரக்டர்னு சொன்னாரு அதான் யோசிச்சேன் அப்படின்னு சொன்னேன்.. அதெல்லாம் இல்ல நீங்க ஒருவாட்டி கேட்டு பாருங்க கதையை உங்களுக்கு பிடிச்சா நடிங்க அப்படின்னு சொல்லிட்டு விஷால் கிளம்பிட்டாரு.. சரி விஷால் சொல்லிட்டாரு ஆதிக் கிட்ட மறுபடியும் கதை கேட்டேன் நல்லவேளை அன்னைக்கு நான் விஷாலை பார்க்கலைன்னா இப்படி ஒரு படத்தை என் வாழ்க்கையிலே மிஸ் பண்ணி இருப்பேன் என எஸ்.ஜே. சூர்யா உருக்கமாக பேசியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top