‘ரஜினி171’க்கு பக்கா ப்ளான் போட்ட லோகேஷ்! ஒருத்தன் உள்ள வர முடியாது – இவங்க இருக்கும் போது என்ன பயம்?

Published on: September 22, 2023
loki
---Advertisement---

Rajini171: தமிழ் சினிமாவில் லோகேஷ் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார். தான் இயக்கிய 4 படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அமோக வரவேற்பையும் பெற்றது. இதில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களால் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் லோகேஷ்.

ஒரு சாதாரண வங்கி அலுவலராக இருந்தவர் இன்று இந்தியாவே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு பெரிய இயக்குனராக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரின் பக்குவம்தான் என்று பல பிரபலங்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். மாநகரம் படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாமே பெரிய நடிகர்களை வைத்து எடுத்தப் படங்கள்தான்.

இதையும் படிங்க: சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…

ஆரம்பத்திலேயே விஜய், கார்த்தி, கமல் என ஒரு மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் போது எந்தளவுக்கு பாரத்தை சுமக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் லோகேஷ் அதை எல்லாவற்றையும் மிகவும் கூலாக சமாளிப்பவர். இதே ஒரு மனநிலைதான் இப்போதும்.

ஒரு பக்கம் விஜயின் லியோ படத்தின் ரிலீஸ். இன்னொரு பக்கம் ரஜினியுடன் கூட்டணி என ஒரே நேரத்தில் லோகேஷ் மீது அனைவரின் பார்வையும் திரும்பியிருக்கிறது. இதை சமாளிப்பது என்பது கடினம். ஆனால் வழக்கம் போல பக்காவாக ப்ளானோடுதான் இருக்கிறார் லோகேஷ்.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க இருந்த பாலிவுட் பிரபலம்.. நடுவில் புகுந்து குளறுப்படி செய்த எஸ்.ஜே.சூர்யா!

லியோ படம் ரிலீஸ் ஆனதும் பிப்ரவரியில் ரஜினி171 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறாராம். ஆரம்பித்த 8 மாதங்களில் படப்பிடிப்பை  முடிக்க இருக்கிறாராம். அடுத்த வருடம் தீபாவளி அன்று ரஜினி 171 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

ஏற்கனவே ஜெய்லர் கொண்டாட்டத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி171 படத்திற்காக என்ன கேட்டாலும் எவ்ளோ கேட்டாலும் கொடுக்கிற மன நிலைமையில் தான் இருக்கிறார்கள். அதனால் ரஜினி 171 படம் நிச்சயமாக பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால் அடுத்த வருடம் ரஜினி தீபாவளியாகத்தான் இருக்கும். வேறு யாரும் உள்ள வர முடியாது என்று  கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:தமிழுக்கு முகம் சுழிக்கும் நயன்… இந்தியில் முதல் ஆளாக ஆஜராகும் பின்னணி… காசுக்காக இப்படியா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.