Connect with us

Cinema News

கேரளா கோட்டைன்னு அதகளம் பண்ணது தான் காரணமா?.. மோகன்லால் ரசிகர்கள் இந்த பொள பொளக்குறாங்களே!..

திடீரென நடிகர் விஜய்யை கேரளாவில் உள்ள மோகன்லால் ரசிகர்கள் பங்கமாக வச்சு செய்து வருகின்றனர். #KeralaBoycottLEO ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து நடிகர் விஜய்யையும் விஜய் ரசிகர்களையும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இந்தியளவில் இந்த ஹாஷ்டேக் திடீரென டிரெண்டாகி வருகிறது. இதற்கு என்ன காரணம் என விசாரித்து பார்த்தால், ஜெயிலர் படத்தில் மோகன்லால் நட்புக்காக கேமியோ ரோல் பண்ணதை வைத்து விஜய் ரசிகர்கள் மோசமாக லாலேட்டனை தப்பு தப்பாக பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கோபத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்!.. பயந்து போன நம்பியார்… ஓடி வந்த எம்.ஜி.ஆர்..

மேலும், லியோ படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கேரளாவில் லியோ படம் தான் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் லாலேட்டன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது என ஆபாச வார்த்தைகளால் பதிவுகளை போட்டது தான் இந்த பஞ்சாயத்துக்கே காரணம் என்றும் லியோ படம் ரிலீஸ் ஆனால், நெகட்டிவ் டேக்குகளை அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக நாங்களும் டிரெண்ட் செய்து அந்த படத்தை ஓடவிடாமல் செய்யப் போகிறோம் என கேரளா ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

எந்தவொரு நடிகர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாகவோ அவமரியாதையாகவோ பேசக் கூடாது என நடிகர் விஜய் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்த நிலையில், தங்கள் தளபதியின் பேச்சையே கேட்காமல் விஜய் ரசிகர்கள் எல்லை மீறி மூத்த நடிகர்களை தொடர்ந்து வம்பிழுத்து வருவது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீரென கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்த ரோபோ சங்கர்!.. அட அப்போ அது கன்ஃபார்ம் தான் போல!..

சில ரசிகர்கள் செய்யும் ட்விட்டர் சண்டை காரணமாக நடிகர் விஜய்யின் லியோ படத்துக்குத் தான் தேவையில்லாத ஹேட்டர்கள் உருவாகின்றனர் என்றும் ரசிகர்கள் மற்ற பிரபல நடிகர்களை விஜய்யை போலவே மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top