கல்யாணத்துக்கு பிறகுதான் கவர்ச்சி நடிகைன்னு தெரியும்! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்டே!..

Published on: September 24, 2023
vichitra
---Advertisement---

Actress Vichitra: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் க்ளாமர் குயினாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா. பல திரைப்படங்களில் ஐட்டம் நடனத்தில் மட்டும் நடிப்பார். ஒரு சில படங்களில் செந்தில், கவுண்டமணி, வடிவேலு இவர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

முத்து படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக தனது நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் மக்களை மிகவும் கவர்ந்தார். இவரின் நடனம் காண்போரை சுண்டி இழுக்கும் அளவுக்கு தனது கவர்ச்சியால் விருந்து படைத்தார்.

இதையும் படிங்க: துருவ் விக்ரமை விடாமல் துரத்தும் பாலா!.. பொறந்தநாள் அதுவுமா நிம்மதியா விடமாட்டுறாரே!..

இந்த நிலையில் விசித்ரா தனது காதல் கணவரான் சாயிஷாவை ஒரு ஹோட்டலில்தான் முதன் முதலில் பார்த்திருக்கிறார். அந்த ஹோட்டலில் மேனேஜராக இருந்த சாயிஷா மீது ஆரம்பத்தில் இருந்தே விசித்ராவுக்கு மோதல்தான் இருந்ததாம். அதன் பின் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணமும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அதுவரைக்கும் விசித்ரா ஒரு க்ளாமர் நடிகை என்றே அவரது கணவருக்கு தெரியாதாம். திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வந்ததாம். ஆனாலும் அதை பற்றி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் சில வரைமுறைகளை வகுத்தாராம்.

இதையும் படிங்க: விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்

திருமணம் முடிந்த புதிதில் வெளியே செல்லும் போது காருக்குள் விசித்ராவும் அவரது கணவரும் உட்கார்ந்திருந்தார்களாம். விசித்ராவை பார்த்ததும் ரசிகர் ஒருவர் ஓடி வந்து விசித்ராவின் கையை பிடித்து குலுக்க ஆரம்பித்தாராம்.

இதை பார்த்ததும் அவரது கணவருக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம். ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறார்கள்? இப்படியா இருப்பார்கள்? என கொஞ்சம் எரிச்சல் அடைந்தாராம். அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் விசித்ராவின் தொலைபேசிக்கு அழைப்புகள் வருமாம். இதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சினிமா தொடர்பான பிரபலங்களில் தொடர்புகளை துண்டித்துக் கொண்டாராம் விசித்ரா.

இதையும் படிங்க: அஜித் நிலைமை தான் சியான் விக்ரம் மகனுக்குமா?.. பொறந்தநாளைக்கு போஸ்டர் வருவதோடு சரி!..

இனிமே சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டேன் என்றும் அவரது கணவரிடம் தெரிவித்தாராம். அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என விசித்ரா அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.