Cinema News
உயிர கொடுத்து நடித்த எஸ்.ஜே.சூர்யா!. நோகாம நொங்கு தின்ன விஷால்!.. மார்க் ஆண்டனி பரிதாபங்கள்!..
கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் விஷால். ஆனால், இவர் கொடுத்த சூப்பர் ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். திமிறு, சண்டக்கோழி, இரும்புத்திரை, மார்க் ஆண்டனி என சில படங்கள்தான் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு லாபமாக அமைந்தது.
மற்ற படங்கள் எல்லாம் சுமாரான கலெக்ஷன், ஆவரேஜ் அல்லது தோல்விப் படங்களாகவே விஷாலுக்கு அமைந்தது. இரும்புதிரைக்கு பின் விஷாலின் நடிப்பில் வெளியான எந்த படமும் ஓடவில்லை. அதேபோல், திரையுலகில் அதிக எதிரிகளை கொண்ட ஒரு நடிகர் என்றால் அது விஷால் மட்டும்தான். அதற்கு காரணம் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என ஒன்றையும் இவர் விட்டது இல்லை.
இதையும் படிங்க: ஹீரோயின்ஸ் பாத்தா கொத்திட்டு போய்டுவாங்க!.. லண்டனில் ஸ்டைலீஸ் லுக்கில் ஊர் சுற்றும் சிம்பு!..
எல்லாவற்றிலும் போட்டியிட்டு ஜெயித்து உள்ளே புகுந்தார். ஆனால், அந்த பதவிகளில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. அல்லது அவரை சிலர் செயல்பட விடவில்லை. நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட சில முயற்சிகள் எடுத்தார். ஆனால், அதை அவரே செய்யவில்லை. இவரும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடித்து அந்த லாபத்தில் அந்த கட்டிடத்தை கட்டுவது என முடிவு செய்தனர். ஆனால், அறிவிப்போடு அது நின்றுபோனது. ஒருபக்கம், சங்க பணத்தில் மோசடி நடந்ததாக இவர் மீது புகாரும் எழுந்தது.
நீதிமன்றத்தில் பல வழக்குகள் பாய்ந்தது. சமீபத்தில் கூட லைக்கா நிறுவனத்திடம் ரூ.20 கோடி அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்காமல் மோசடி செய்துவிட்டார் என்கிற வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடித்து வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனா சண்டை தான் நடக்கும்!.. சூரி ஹீரோயின் உருட்டிய செம உருட்டு!..
இந்த படத்தில் விஷாலை விட எஸ்.ஜே.சூர்யாவே சிறப்பாக நடித்திருந்தார். அவரின் நடிப்பில்தான் இந்த படமே வெற்றி பெற்றுள்ளதாக ரசிகர்களே கூறிவருகின்றனர். ரசிகர்கள் தியேட்டருக்கு இழுத்துள்ளதும் அவரின் நடிப்புதான். ஆனால், ஒரு படத்தின் வெற்றி என்பது ஹீரோவுக்குதான் செல்லும் என்பதால் கிரெடிட் விஷாலுக்கு போய்விட்டது.
இந்த பட வெற்றியை விஷால் தக்க வைத்து கொள்வாரா இல்லை அடுத்தடுத்து வழக்கம்போல் தோல்விப்படங்களை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ படத்தின் மீது இருந்த வருத்தம்! ‘எதிர்நீச்சல்’ இயக்குனரிடம் புலம்பி தீர்த்த மாரிமுத்து