கமலுக்கே அல்வா கொடுக்க நினைத்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சி வாழ்நாள் தண்டனையை கொடுத்த ஆண்டவர்..

Published on: September 25, 2023
kamal
---Advertisement---

Actor Kamal: தமிழ் சினிமாவில் விதவிதமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல விதங்களில் முயன்று வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்வது வழக்கம்.

இப்படி சினிமாவை வேறு பக்கம் கொண்டு போகத் துடிக்கும் கமலுக்கே விபூதி அடிக்கப் பாத்திருக்கிறார் ஒரு இயக்குனர். கமல் நடிப்பில் முழு நீள நகைச்சுவை படமாக வெளிவந்தது வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்தப் படத்தை இயக்கியவர் சரண்.

இதையும் படிங்க: ஒன்னா களமிறங்கும் தல தளபதி… யாரும் சண்டை மட்டும் போட கூடாதுப்பா…

வசூல்ராஜா படப்பிடிப்பின் போதே சரண் கமலிடம் தன்னுடைய நிறுவனத்திற்காக ஒரு படம் பண்ணித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அப்போது சம்பளமாக 9 கோடி வரை கமல் பெற்றுக் கொண்டிருந்தாராம்.

உடனே கமலும் சரி என சொல்ல கால்ஷீட்டும் வாங்கி விட்டாராம். ஆனால் கால்ஷீட்டை வாங்கிய சரண் அந்தப் படத்தை வேறொரு நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு விற்றுவிட்டாராம். இது ஒரே நேரத்தில் கமலுக்கு தெரியவர கடுப்பாகிவிட்டாராம் கமல்.

இதையும் படிங்க: வாசலில் காத்து கிடந்த ரஜினி… பொறுமையாக தூங்கி எழுந்து வந்த கமல்ஹாசன்… அதுக்குனு இப்டியா?

அதிலிருந்தே இன்றுவரை சரணுக்கு கால்ஷீட்டே கொடுக்கவில்லையாம். தன்னுடைய நிறுவனத்திற்கு என சொல்லி ஒரு சம்பளம் பேசி அதை பெரிய தொகைக்கு வேறொரு நிறுவனத்திற்கு விற்க போனதால் தன்னை இப்படி ஏமாற்றிவிட்டாரே என்ற காரணத்தினால் இன்றுவரை சரணுக்கு கொடுத்த தண்டனையாக கமல் நடிக்கவே இல்லையாம்.

சரணும் கமலும் இணைந்து நடித்த கடைசி படமாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் அமைந்தது. அது எப்பேற்பட்ட நகைச்சுவை மிகுந்த படமாக மக்களை ரசிக்க வைத்த படம் என்று அனைவருக்கும் தெரியும். அதுவும் நாகேஷ், சந்திரபாபு இவர்களின் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இன்றளவும் ஒரு தனி வரவேற்பை பெற்ற நகைச்சுவை படமாக இருக்கின்றது.

இதையும் படிங்க: ஓவர் குஷியில் இருக்கும் ஆதிக் ரவிசந்திரன்… மார்க் ஆண்டனி ஹிட்டுக்கு பின்னால் இருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் இதானா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.