Connect with us

Cinema History

வாசலில் காத்து கிடந்த ரஜினி… பொறுமையாக தூங்கி எழுந்து வந்த கமல்ஹாசன்… அதுக்குனு இப்டியா?

Kamal Rajini: தமிழ் சினிமாவின் இரண்டு முகங்களாக இருக்கும் கமலும், ரஜினியும் இன்று வரை நண்பர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் கமல் அப்போதில் இருந்தே ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் ரஜினியின் வாழ்க்கை இதில் நேருக்கு எதிர் தான்.

குருகுல வாழ்க்கையில் பயிற்சி பெற்று கண்டெக்டராக பணிக்கு சேர்ந்தவர் தான் சிவாஜி ராவ். அப்போது அங்கிருந்தவர்கள் நடத்தும் நாடகத்தில் நடித்து வருவார். அவரின் நடிப்புக்கு அப்போதே கூட்டம் அதிகமாம். ரஜினியின் நடிப்பை பார்த்த நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் தான் சென்னையின் திரைப்பட கல்லூரியில் இணைந்து பயிற்சி எடுத்தார்.

இதையும் படிங்க: பாலிவுட்டே வேணாம்… யூ டர்ன் போட்ட டாப் இயக்குனர்… ஷாருக்கானுக்காக போட்ட ஸ்கெட்டில் சிக்கிய கோலிவுட் ப்ரின்ஸ்?

அதன் பின்னர் பாலசந்தர் சொன்னதன் பேரில் ஒரே மாதத்தில் தமிழ் கற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுத்த திரைப்படம் தான் சிவாஜி ராவை ரஜினியாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உதவியது. அப்படம் அபூர்வ ராகங்கள். கே.பாலசந்தர் இயக்கிய இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பு செய்து இருந்தார். 

ரஜினிகாந்துடன், கமல், ஸ்ரீவித்யா, நாகேஷ், ஜெயசுதா ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.  வாணி ஜெயராம் பாடிய “ஏழு சுவரங்களுக்குள்” பாடல் வெற்றியடைந்ததும் அல்லாமல் அவருக்கு தேசிய விருதினையும் வாங்கி தந்தது.

இதையும் படிங்க: ஓவர் குஷியில் இருக்கும் ஆதிக் ரவிசந்திரன்… மார்க் ஆண்டனி ஹிட்டுக்கு பின்னால் இருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் இதானா?

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பிரபலங்களை கவிதாலயா காரில் தான் அழைத்து கொண்டு வருவார்கள். முதலில் ரஜினியையும், ஸ்ரீவித்யாவையும் அழைத்து கொண்டு கமல் வீட்டிற்கு கார் செல்லும். கார் வந்த பின்னரே கமல் எழுந்து தயாராகி வருவார். ஸ்ரீவித்யா வீட்டிற்குள் சென்று விடுவாராம். 

ஆனால் புதுமுகம் என்பதால் ரஜினி உள்ளே செல்ல தயங்குவாராம். அங்கிருந்தவர்களும் கமலை உள்ளே அழைக்க மாட்டார்களாம். கமல் வரும்வரை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பார் என கமலின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top