மீண்டும் தள்ளிப்போகும் விடாமுயற்சி!. விஜய்தான் காரணமா?!… இதுக்கு ஒரு எண்டே இல்லையா?!…

Published on: September 26, 2023
ajith
---Advertisement---

அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஏனெனில், துணிவு படம் வெளியாகி 8 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. துணிவு படத்தோடுதான் விஜயின் வாரிசு படமும் வெளியானது. ஆனால், அந்த படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் நடித்தே முடித்துவிட்டார்.

ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்கவே இல்லை. அஜித்தை பைக்க எடுத்துக்கொண்டு உலகை சுற்றப்போனது. விக்னேஷ் சிவன் இயக்குனர் என முடிவு செய்யப்பட்டு பின்னர் அவர் சொன்ன கதை பிடிக்காமல் அவரை தூக்கி விட்டு மகிழ் திருமேனியை இயக்குனராக போட்டது, நல்ல கதையை உருவாக்க சில மாதங்கள் எடுத்துக்கொண்டது என விடாமுயற்சி தாமதமானதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு நோ!. ரஜினி படம்னா ஓகே!. கமல் – சூர்யா முடிவுக்கு பின்னால் இருக்கும் பஞ்சாயத்து இதுதான்!..

ஒருபக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு எங்கு துவங்குவது என்பதிலும் குழப்பம் நீடித்து வந்தது. சென்னை, மலேசியா, ஹாங்காக், பூனே, ஹைதராபாத், துபாய் என பல ஊர்கள் சொல்லப்பட்டு இப்போது அசர்பைசான் என முடிவு செய்துள்ளனர். வருகிற அக்டோபர் 2ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்பட்டது. படக்குழுவும் அதற்கு தயாராகி வந்தது.

இப்படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்கவுள்ளார். அதேபோல், காலா மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்த ஹுமா குரோஷியும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் மீண்டும் தள்ளி போயுள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வேறோடு சாய்த்த விஷால்!.. ஈகோ பார்க்காம செஞ்ச வேலையால் கிடைத்த வெற்றி..

வருகிற அக்டோபர் 4ம் தேதிதான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படுவதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளது. அதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை அக்டோபர் 2ம் தேதி நடக்கவுள்ளது. அதே தேதியில் விடாமுயற்சி படத்தை துவங்கினால் சமூகவலைத்தளங்களில் அஜித் – விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி மோதிக்கொள்வார்கள்.

அதை தவிர்க்கவே படக்குழு 2 நாள் கழித்து விடாமுயற்சி படத்தை துவங்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது அஜித்தின் முடிவாக கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் பல மாதங்களுக்கு பின் விடாமுயற்சி படம் துவங்குவது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஷங்கருக்கே நோ சொன்ன சித்தார்த்… டாப் இயக்குனர் சொன்ன ஐடியாவால் தடம் புரண்ட சினிமா வாழ்க்கை!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.