அட்லி எல்லாம் இப்போ தான்!.. அந்த காலத்துலயே விஜய்யை எப்படி ஏமாத்திருக்காங்க பாருங்க!..

Published on: September 27, 2023
---Advertisement---

மகேஷ் பாபுவின் ஒக்கடு, போக்கிரி படங்களை ரீமேக் செய்து தமிழில் முன்னணி நடிகராக மாறி விஜய்க்கு இயக்குநர் அட்லி எல்லாம் புதுப் படம் கொடுக்கிறேன் என பாட்ஷா, சத்ரியன், அபூர்வ சகோதரர்கள், சக் தே இந்தியா உள்ளிட்ட படங்களை உல்டா செய்து ஏகப்பட்ட காட்சிகளை ஆட்டையை போட்டு படமெடுத்து ஏமாற்றி விட்டார் என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அந்த காலத்திலேயே விஜய் படங்களில் ஹாலிவுட் படங்களின் காட்சிகள் அப்பட்டமாக சுட்டு வைத்து விஜய்யையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் எப்படி ஏமாத்திருக்காங்க பாருங்க என ஒரு வீடியோவை நெட்டிசன் ஒருவர் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: ஷங்கரை நம்பி சாம்ராஜ்யத்தை இழந்த ராம்சரண்!.. கேம் சேஞ்சர் ரிலீஸாக இத்தனை வருஷம் ஆகுமா?..

யூத் படத்தில் இடம்பெற்ற சர்க்கரை நிலவே, ஆல் தோட்ட பூபதி பாடல்களுக்கு அடிமையாகாத விஜய் ரசிகர்களே இருக்க முடியாது. படம் சுமாருக்கும் கீழ் ரகம் தான் என்றாலும், காமெடி மற்றும் பாடல் காட்சிகள் படத்தை ரொம்பவே காப்பாற்றியிருக்கும்.

ஆனால், அந்த படத்தின் காமெடி காட்சிகள் எல்லாமே பிரபல ஹாலிவுட் படத்தின் காபி தான் என இன்ச் இன்சாக இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு எடுத்துப் போட்டு பங்கம் பண்ணி உள்ளனர்.

இதையும் படிங்க: லியோ செகண்ட் சிங்கிள்.. ஜெயிலர் ’ஹுகும்’ ரேஞ்சுக்கு பதிலடி பாட்டா இருக்குமா?.. திருப்பிக் கொடுக்கணும்ல!..

விஜய்யின் யூத் படத்தை இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கிய நிலையில், அந்த படத்தில் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் பார்த்த வேலைதானா என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், இப்போது மட்டுமல்ல அப்போதிலிருந்து நடிகர் விஜய் ஏகப்பட்ட ரீமேக் படங்களில் தான் நம்பி நடித்துள்ளார். யூத் திரைப்படம் தெலுங்கில் வெளியான சிரு நவ்வுதோ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான். அந்த படத்தில் இருந்த ஹீரோயின், வில்லன் என அப்படியே இந்த படத்திற்கு கொண்டு வந்து நடித்திருந்தார் விஜய். அங்கே பிரம்மானந்தம் காமெடியில் கலக்க இங்கே விவேக் காமெடி பண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Life is Beatutiful படத்தில் இடம்பெற்ற காட்சிகள் தான் யூத் படம் முழுக்கவே ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் இடம்பெற்றிருக்கும். இதில், கொடுமை என்னவென்றால், யூத் படத்தின் டைட்டிலுக்கு கீழேயே லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என சைட் லைன் போட்டிருப்பார்கள்.

இந்த வீடியோவை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://twitter.com/FilmFoodFunFact/status/1706996421298450705

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.