லியோ படத்தில் களமிறங்கிய கமல்!.. தரமான சம்பவம் செய்த லோகேஷ்!.. அப்ப LCU கன்பார்ம்….

Published on: September 28, 2023
kamal
---Advertisement---

kamalhaasan Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் திரைப்படம் இது. விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்து லோகேஷ் அடுத்து இயக்கும் படம் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

லோகேஷின் படங்களை ரசிகர்கள் எல்.சி.யூ என அழைக்க துவங்கி விட்டனர். அதற்கு காரணம் ஒரு புதிய இருண்ட உலகை அவர் ரசிகர்களுக்கு காட்டுவதுதான். அது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. லியோ படம் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் பாலா… அப்போ தயாரிப்பாளர் தலைல துண்டுதானா…

எனவே, இப்படத்தின் புரமோஷன் வேலைகளும் ஒருபக்கம் துவங்கிவிட்டன. இப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இது விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்த அப்டேட்டுகள் வருவதால் அதை வைத்து ஆறுதலடைந்து வருகின்றனர். தற்போது டப்பிங் உள்ளிட்ட சில பணிகள் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் அவற்றை மிகவும் நேர்த்தியுடனும், கவனத்துடனும் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: இது சந்திரமுகியும் காஞ்சனாவும் கலந்த கலவைடா!.. எப்படி இருக்கு வேட்டையன் ஆட்டம்.. சந்திரமுகி 2 விமர்சனம்!

இந்நிலையில், லியோ படத்தில் கமல்ஹாசனும் இணைந்துள்ளார் என்கிற இன்ப அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கமலின் குரலை வைத்து சில வசனங்களை பதிவு செய்துள்ளார் லோகேஷ். அதாவது வாய்ஸ் ஓவர்லாப்பில் கமல் பேச காட்சிகள் விரியும். பொன்னியின் செல்வன் படத்தில் கூட துவக்கத்தில் கமல்தான் பேசியிருந்தார்.

அப்படி லியோ படத்திலும் வருகிறதா இல்லை ரசிகர்கள் எல்.சி.யூ (LCU) என சொல்வது போல விக்ரம் கதாபாத்திரமாக கமல் இதில் பேசியிருக்கிறாரா என்பது படம் வந்தால் தெரிந்துவிடும். ஏற்கனவே லியோ படத்தில் அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் சத், மன்சூர் அலிகான் என பலர் நடிகர்கள் நடித்துள்ள நிலையில் கமலும் இணைந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: யம்மா காசு இருக்குனு இந்த பந்தா ஓவரு… நயன் வீட்டுக்கு புது எண்ட்ரி.. இத்தனை கோடியா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.