யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன கதையா போச்சா… தர்பார் ப்ளாப்புக்கு காரணம் இதுதானா?

Published on: September 30, 2023
---Advertisement---

Darbar: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம். பல விமர்சனங்களை சந்தித்து மிகப்பெரிய தோல்வி படமாகியது. இதற்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும் சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் தர்பார். ஏஆர் முருகதாஸ் எழுதி இயக்கிய இப்படத்தினை லைகா புரொடக்‌ஷன் தயாரித்தது. இப்படத்தில் ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி, நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: நெல்சனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை! எல்லாம் ‘ஜெயிலர்’ வெற்றிதானா? கொஞ்சம் பாத்து பண்ணுங்க பாஸ்

27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் தர்பார் தான். இதற்கு முன்னர் அவர் கடைசியாக போலீஸ் வேடத்தில் நடித்தது பாண்டியன் திரைப்படத்தில் தான். 2020ம் ஆண்டு பொங்கல் ரிலீஸாக இப்படம் வெளியிடப்பட்டது.

இப்படம் கலவையான விமர்சனத்தினை பெற்றது. சில சீன்கள் ட்ரோல் மெட்டிரியலாகவும் மாறியது. படத்தில் வசூல் வந்தாலும் விநியோகிஸ்தர்கள் மிகப்பெரிய நஷ்டத்தினை சந்தித்தனர். பாபா, குசேலன் மற்றும் லிங்கா படத்தினை தொடர்ந்து ரஜினியின் நான்காவது தோல்வி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நானும் தான் லஞ்சம் கொடுத்தேன்.. விஷாலை தொடர்ந்து களத்தில் குதித்த ஹிட் நடிகர்..!

தர்பார் படத்திற்கு ரஜினிகாந்த் 108 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கினார். இப்படத்தின் தோல்வியால் அவர் அடுத்து நடித்த அண்ணாத்தா திரைப்படத்தில் ரஜினியின் சம்பளத்தினை சன் பிக்சர்ஸ் பாதியாக குறைக்க முடிவு செய்தது. இந்நிலையில் படத்தின் தோல்விக்கு தான் காரணமே இல்லை என் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் ஷூட்டிங் சென்றோம். ஆனால் ஜூனுக்குள் படத்தினை முடிக்க எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆகஸ்ட்டிற்குள் அரசியலுக்கு செல்வதால் படத்தினை நான்கு மாதத்துக்குள் முடிக்கும் கட்டாயத்தாலே அந்த படம் ப்ளாப் ஆனதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.