Connect with us

Cinema News

இது அக்டோபர் மாசமா இல்லை அப்டேட் மாசமா?.. இப்படி மூணு சிங்கம் ஒண்ணா களமிறங்குதே!..

இந்த அக்டோபர் மாதம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்ட மாதமாக மாறப் போவது உறுதியாகி உள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களின் அடுத்த படங்களின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.

ஒரு அப்டேட் இல்ல ரெண்டு அப்டேட்டா இந்த மாதமே அப்டேட் மாதமாக மாறப்போகிறது என்பது சினிமா ரசிகர்களின் உச்சகட்ட சந்தோஷமாக மாறி உள்ளது.

இதையும் படிங்க: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வீட்டுக்கு உள்ளே சென்ற 18 போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா?.. இதோ லிஸ்ட்!..

அக்டோபர் முதல் நாளான இன்று லைக்கா நிறுவனம் தலைவர் 170 படத்தின் நடிகர்கள் அப்டேட் மற்றும் லால் சலாம் படத்திலிருந்து ஒரு சூப்பரான அப்டேட்டை மதியம் 2:00 மணிக்கு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. முதல் நாளே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டை ரஜினிகாந்தை 73 வயதிலும் கொடுத்து வருவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கான தரமான சம்பவம்தான்.

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடிகர் அஜித்குமார் அஜர் பைஜான் என்னும் இடத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அஜர் பைஜானுக்கு சென்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..

ரஜினி மற்றும் அஜித்தே இப்படி அப்டேட் கொடுத்தால் இந்த மாதமே விஜயின் லியோ மாதம் ஆயிற்றே தளபதி மட்டும் சும்மா இருப்பாரா என்ன? லியோ படத்தின் டிரைலர் இந்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த படத்தின் புரமோஷனை கடைசி நேரத்தில் பிரம்மாண்டமாக ஏகப்பட்ட அப்டேட் களுடன் தயாரிப்பாளர் லலித் குமார் சம்பவம் உறுதி என்கிற வகையில் சாதித்து காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: மார்க் ஆண்டனி ஹிட் அடிச்சும் அது நடக்கலயே!.. புலம்பும் விஷால்!. ஐயோ பாவம்!..

அதுமட்டுமின்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தின் பூஜை இந்த மாதமே நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தன் பங்குக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை இன்று ஆரம்பிக்க உள்ளார். எச் வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் கூடிய விரைவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top