Connect with us

Bigg Boss

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!.. கட்டம் கட்டிட்டாங்க!..

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்தார். இந்த சீசனில் முதல் நாளிலேயே 18 பேர் பிக் பாஸ் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

இந்த சீசனில் சின்ன வீடு பெரிய வீடு என போட்டியாளர்களுடன் சண்டையை மூட்டி விட பிக் பாஸ் பக்காவான பிளான் போட்டு இரண்டு வீடுகள் கான்சப்ட்டை உருவாக்கியுள்ளனர். கடைசியாக வந்து கேப்பிடல் பதவியை பெற்ற விஜய் வர்மா தனக்கு பிடிக்காத ஆறு போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவிட்டார்.

இதையும் படிங்க: அம்மாவுடன் பேசக்கூடிய விஷயமா அதெல்லாம்?.. ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயத்தை கேட்டீங்களா!..

ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து போட வேண்டும், பாத்திரம் கிளீன் பண்ண வேண்டும் மற்றும் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும் என தொடர்ந்து சிக்கலில் சிக்கி வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏழு பேர் நாமினேட் ஆகி உள்ளனர். ரவீனா தாஹா, ஜோவிகா, ஐஷு என மூன்று இளம் பெண் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அதுக்கு மொத்தமா நோ சொன்ன விஜய்!.. தளபதி தரிசனமே அப்போ இனிமேல் கிடையாதா?.. என்ன இப்படி ஆகிடுச்சு!..

மேலும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், பிரதீப் ஆண்டனி மற்றும் அனன்யா ராவ் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், வயதான போட்டியாளரான பவா செல்லதுரை தான் முதலில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் வாசுதேவன் தான் தற்போது குறைவான வாக்குகளுடன் கருத்துக் கணிப்புகளில் கடைசி இடத்தில் உள்ளார் என்றும் முதல் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது அவர்தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top