லியோ படம்லாம் இருக்கட்டும்!. விஜய் நடித்து பாதியில் நின்ற 4 படங்கள் பற்றி தெரியுமா?…

Published on: October 4, 2023
vijay
---Advertisement---

Actor Vijay: தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாக நடிகராக இருப்பவர் விஜய். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான ‘நாளைய தீர்ப்பு ‘ என்கிற படம் மூலம் அறிமுகமகமாகி தொடர்ந்து எஸ்.ஏ.சியின் இயக்கத்திலேயே தேவா, ரசிகன், விஷ்ணு என சில படங்களில் நடித்தார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இப்போது 200 கோடி சம்பளம் பெறும் நடிகராக வளர்ந்துவிட்டார். ஒருபக்கம் ரஜினிக்கு போட்டியாக வளர்ந்துவிட்டார் எனவும் சில பேச துவங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விஜய்க்கு கெட் அவுட்டு!.. அஜித்துக்கு கட் அவுட்டா?.. த்ரிஷாவின் ராங்கித்தனம் தாங்கலையே பாஸ்!

இது ஒருபுறம் எனில் விஜய் நடிப்பில் உருவாகி தலைப்பு, போஸ்டர் என வெளியான பின்னரும் பாதியிலேயே நின்ற 4 திரைப்படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். அமீரின் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த திரைப்படம் கண்ணபிரான். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை.

யாருமே விஜயை நம்பி படம் எடுக்க முன்வராத நிலையில் பூவே உனக்காக என்கிற படத்தில் அவரை நடிக்க வைத்து எல்லோருக்கும் அவரை பிடிக்க வைத்தவர் விக்ரமன். சில வருடங்கள் கழித்து விஜயை வைத்து ‘உன்னை நினைத்து’ என்கிற படத்தை இயக்கினார். ஆனால், படத்தின் சில காட்சிகளை விஜய் மாற்ற சொல்ல, முடியாது என விக்ரமன் மறுக்க விஜய் அப்படத்திலிருந்து விட அவருக்கு பதில் சூர்யா நடித்து இப்படம் வெளியானது.

இதையும் படிங்க: அசினுடன் ஷூட்டிங்!.. கேரவானுக்கு பின்னாடி விஜய் செஞ்ச காரியம்!.. அதிர்ந்து போன படக்குழு!..

சீமானின் இயக்கத்தில் விஜய் நடிக்க சம்மதித்த திரைப்படம் பகலவன். இப்படத்தின் கதை மற்றும் காட்சிகளை கேட்டு விஜய் நடிக்க சம்மதித்தார். ஆனால், அரசியல் தொடர்பான காட்சிகள் நிறைய இருந்ததால் இந்த படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார். கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘யோஹன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தின் போஸ்டரெல்லாம் வெளியானது.

இந்த படம் ஏ செண்டர் ஆடியன்ஸுக்கு மட்டுமே பிடிக்கும் என நினைத்த விஜய் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின் பல வருடங்கள் கழித்து விக்ரமை வைத்து இந்த படத்தை இயக்கினார் கவுதம் மேனன். ஆனால், இப்போது வரை அந்த படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.