Cinema History
தன்னோட தலையில் தானே மண்ணள்ளி போடப்பார்த்த இளையராஜா… அப்புறம் காப்பாத்தினது யாரு தெரியுமா?..
இளையராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரில் ஒருவர். இவர் கிட்டதட்ட ஆயிரத்துக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடல்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.இவர் 1976ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடல்கள் வெற்றியும் அடைந்துள்ளன. ராமராஜன் போன்ற பல நடிகர்களின் படங்கள் வெற்றியடைய இவரின் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது.
பின் பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற பல திரைப்படங்களில் தனது இசையின் மூலம் மக்கள் மனதை கட்டி போட்டார். இவர் இன்று வரையும் பல படங்களுக்கு தனது பாணியில் இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க:ஜெயிலர் மாஸ் ஹிட் அடிச்சும் சம்பளத்தை குறைத்து வாங்கிய ரஜினி!.. தலைவருக்கு ஒரு கணக்கு இருக்கு!
இவரது இசையில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் படிக்காதவன். இப்படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கினார். மேலும் இப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் ரஜினிக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தனது தம்பி தன்னை ஏமாற்றிய துக்கத்தில் ஊர தெரிஞ்சிகிட்டேன்…உலகம் புரிஞ்சிகிட்டேன்.. என சோகப்பாடல் பாடுவார்.
இப்பாடல் உருவாகும் போது பெரிய சம்பவமே நடந்துள்ளது. அதாவது இப்பாடலின் வரிகளை எழுதியவர் கவிபேரரசு வைரமுத்து. அவர் வரிகளை எழுதி கொடுத்துவிட்டு தனது அடுத்த படத்தின் வேலைக்கு சென்றுவிட்டாராம். இளையராஜா அப்பாடலுக்கு இசையமைத்துவிட்டு வேறு படத்திற்கு இசையமைக்க சென்றுவிட்டாராம்.
இதையும் படிங்க:ரகுவரனை வில்லனாதான் பார்த்திருப்பீங்க! இளையராஜாவையே மிஞ்சிய ரகுவரனை பற்றி தெரியுமா?
ஆனால் அப்பாடலின் பொறுப்பை அவரின் உதவியாளரான சுந்தர்ராஜனிடம் விட்டுசென்றுள்ளார். அதே சமயம் அப்படத்தின் இயக்குனரும் பாடலின் படபிடிப்புக்காக சென்று விட்டாராம். அந்நிலையில் பாடகர் ஜேசுதாஸ் பாடலை பாட வந்துகொண்டிருந்தாராம். ஆனால் அந்த இசைகோர்வையை சுந்தர்ராஜன் எங்கோ வைத்துவிட்டாராம். அதனால் என்ன செய்வது என தெரியாமல் சுந்தர்ராஜன் தவித்துள்ளார்.
இசைகோர்வையை காட்டாவிட்டால் ஜேசுதாஸ் கோபப்படுவார். அங்கு இளையராஜாவிடம் கூறினால் அவர் கோபப்படுவார். என்ன செய்ய என தெரியாமல் வைரமுத்துவிற்கு போன் செய்துள்ளார். வைரமுத்து போனிலேயே அந்த பாடலுக்கு ஏற்றவாறு மெட்டு போட்டுள்ளார். பின் ஜேசுதாஸ் வருவதற்குள் அதனை தயாராக்கி வைத்துள்ளார். இவ்வாரு உருவானதுதான் ஊர தெரிஞ்சிகிட்டேன்…உலகம் புரிஞ்சிகிட்டேன் பாடல்… என்னதான் தான் இன்னொரு பாடல் வரிகளை எழுதி கொண்டிருந்தாலும் ஏற்கனவே எழுதிய பாடலை மறக்காமல் வைத்திருப்பது வைரமுத்துவின் சிறப்பம்சம். அது தக்க சமயத்தில் சண்டை வராமல் இருப்பதை தவிர்த்துள்ளது.
இதையும் படிங்க:இந்த படத்தில இருந்து உன்னை தூக்கிட்டோம்!.. இளையராஜாவுக்கு பறிபோன முதல் பட வாய்ப்பு…