மிடில் க்ளாஸ் மாதவனாக வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம்! தற்போதுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published on: October 7, 2023
san
---Advertisement---

Santhanam Property : தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவருடைய சொத்து மதிப்பு இவ்வளவா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு  வந்து இப்போது ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.ஆரம்பத்தில் ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டு வந்தார் சந்தானம்.

இதையும் படிங்க: ஆபத்து எப்படியும் வரலாம்! இதுவரை வெளிவராத விஜயின் அரசியல் குறித்த பேட்டி – அப்பவே அஸ்திவாரம் போட்ட தளபதி

அதன் பிறகு விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார்.லொள்ளு சபாவில் கிடைத்த வரவேற்பு வெள்ளித்திரையில் இவரை அப்படியே அணைத்துக் கொண்டது.

ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் வெள்ளித்திரையில் பயணிக்க ஆரம்பித்தார். அதில் மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து ஷாக் கொடுத்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு முன்னாடி தலீவர் ஜுஜுபி!.. தென்னை மரத்துல ஒரு குத்து.. பனை மரத்துல ஒரு குத்து!.. ப்ளூ சட்டை பலே!..

இருந்தாலும் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டி, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் கூட நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் சந்தானத்தின் சொத்து  மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சந்தானத்திற்கு சென்னையில் ஒரு வீடு இருக்கும் பட்சத்தில் சில லாபகரமான ரியல் எஸ்டேட் பிஸினஸ்களும் செய்து வருகிறாராம்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஸ்ருதி- ரவி காதலுக்கு நோ சொன்ன முத்து… மீனா தங்கை பெண் கேட்டு கொடுத்த அதிர்ச்சி..!

இரண்டு சொகுசு கார்களுடன் ஆரம்பத்தில் முதன் முதலில் வாங்கிய காரையும் நியாபகமாக வைத்திருக்கிறாராம் சந்தானம். நகைச்சுவை நடிகனாக இருக்கும் போதே 3 கோடியில் இருந்து 5 கோடி வாங்கும் நடிகராகத்தான் இருந்திருக்கிறார்.

இப்போது ஹீரோவாக ஒரு படத்திற்கு 15 கோடியில் இருந்து 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதனால் இவரின் சொத்து மதிப்பு 120 கோடியில் இருந்து 150கோடி வரை இருக்கும் என்று தெரிகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.