Cinema History
ஷங்கரை பார்த்து சூடு போட்டுக்கிட்டேன்!.. கமல் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பட்ட பாடு!..
KS Ravikumar: புரியாத புதிர் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதன்பின் ரூட்டு மாறி தனது ஸ்டைலில் படமெடுக்க துவங்கினார். இவர் இயக்கிய சேரன் பாண்டியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதுவே அவரின் ஸ்டைலாக மாறியது.
தொடர்ந்து சரத்குமாரை வைத்து பல திரைப்படங்களை இயக்கினார். நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியை வைத்து முத்து, படையப்பா, லிங்கா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனை வைத்து தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: இத்தனை பெண்களுடன் காதலா? கேள்வி கேட்ட நிரூபருக்கு சாட்டையடி பதில் கூறிய கமல்
15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருந்தார். அதன்பின் வந்த சில இயக்குனர்கள் அவரை ஓவர்டேக் செய்து மேலே வந்தனர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதோடு, பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இப்போது குணச்சித்திர நடிகராக மாறி பல படங்களிலும் நடித்து வருகிறார். சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ரஜினியின் குட்புக்கில் எப்போதும் இருக்கும் இயக்குனர் இவர். ரஜினி எந்த படத்தில் நடித்தாலும் அப்படத்தின் கதை விவாதத்தில் ரவிக்குமார் பங்கேற்பார்.
இதையும் படிங்க: 17 வயசுலயே அப்பாவிடம் அந்த ஆசையை சொன்ன கமல்!.. காம ராசன் என சும்மாவா சொன்னாங்க!..
கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒருமுறை ‘நீங்கள் இயக்கிய படங்களிலேயே பரிசோதனை முயற்சி என நீங்கள் நினைத்த படம் எது?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன அவர் ‘தசாவாதரம் படத்தைத்தான் சொல்வேன். அந்த கதையை கமல் சொன்னபோது என்னால் அப்படத்தை இயக்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது.
ஆனால், உங்களால் முடியும் என நம்பிக்கை கொடுத்து கமல் என்னை இயக்க வைத்தார். சிறிதாக தொடங்கிய படம் பெரிய அளவுக்கு போனது. ஒருகட்டத்தில் எனக்கு பயமே வந்துவிட்டது. ஷங்கரை பார்த்து சூடு போட்டுக்கிட்டேன் என்று கூட நினைத்தேன். ஆனால், அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்து பெரிய வெற்றியை பெற்றது’ என அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கமல் வச்ச கன்னிவெடி!.. 150 கோடி கொடுத்தும் இப்படியா?!.. பிரபாஸுக்கு நேரமே சரியில்ல…