ஒன்னு இல்ல ரெண்டு இல்லை!.. 100 லியோ அப்டேட் கொடுத்துருக்காரு லோகேஷ் கனகராஜ்.. இது ரத்னகுமார் உருட்டு!..

Published on: October 8, 2023
---Advertisement---

விஜய்யின் லியோ படத்திற்கான அப்டேட் கேட்டு  கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒட்டுமொத்தமாக 100 அப்டேட்களை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் என அவரது நண்பரும் ஆடை பட இயக்குனருமான ரத்னகுமார் பதிவிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் உலகமகா உருட்டு என கலாய்த்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் லியோபடத்தின் பட்ஜெட் 300 கோடி என்றும் நடிகர் விஜய் டு போடாமல் சில வெறித்தனமான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் என்றும் பிரியா ஆனந்த் கௌதமன் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார், இதுவரை அறிவிக்காத ஒரு சஸ்பென்ஸ் நடிகர் படத்தில் உள்ளார், வழக்கம்போல விஜய்க்கு இருக்கும் அறிமுக பாடல், பஞ்ச் டயலாக் போன்றவை இந்த படத்தில் இருக்காது முழுக்க முழுக்க 100% லோகேஷ் கனகராஜ் படமாகவே இருக்கும் என்பதை மட்டுமே ரிவீல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸுக்கு பெரிய கும்பிடு!.. சந்திரமுகி 2வை பார்த்து காண்டாகிட்டாரா நயன்தாரா!..

லியோ திரைப்படம் எல்சியூவா இல்லையா என்பதையும் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் வருமா வராதா என்பது குறித்தும், லியோ படத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் மற்றும் சூர்யா நடித்துள்ளனர் என எந்த கேள்விக்கும் இன்னும் 10 நாட்கள் பொறுத்திருங்கள் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு புரிய வரும் என பதில் அளித்திருந்தார்.

மேலும், இந்த படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமேக்கா என்பதை கூட லோகேஷ் கனகராஜ் உறுதியாக கூறவில்லை. இந்நிலையில், ஆடியோ லான்ச் நடைபெறாமல் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரியை கேட்காமல் பயங்கர கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ரத்தின குமாரின் ட்வீட்டை பார்த்து காண்டாகி உள்ளனர்.

இதையும் படிங்க: அவனை ஹீரோவா போட்டு எடுக்கலாம்னு நினைச்சேன்!.. தலைவர் 171 சுவாரஸ்யம் சொன்ன லோகேஷ்!..

சரியாக ஒரு அப்டேட்டை கூட அவர் கொடுக்கவில்லை என்றும் இது 100 அப்டேட்டை கொடுத்தார் என நல்லா உருட்டுறீங்க என கலாய்த்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.