காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..

Published on: October 8, 2023
---Advertisement---

லியோ திரைப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை லோகேஷ் கனகராஜ் கடைசி நேரத்தில் தனது பேட்டிகள் மூலம் வெளிப்படுத்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் ஹைப்பை எகிற வைத்து வருகிறார்.

சுமார் 150 பேர் நடிகர் விஜய்யை கட்டி இழுத்து செல்வார்கள் அவர்களது கை நகங்கள் எல்லாம் கீறிருக்கும் ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் டூப் போடாமல் நடிகர் விஜய் நடித்து கொடுத்தார் எனக் கூறியதே விஜய் ரசிகர்களை கூஸ்பம்ஸ் அடையச் செய்தது.

இதையும் படிங்க: மீண்டும் ஜிம் மாஸ்டருடன் லாஸ்லியா!.. கமெண்ட் பக்கம் முழுக்க காதல் கதை தான் ஓடுது!..

இந்நிலையில், இதற்கு முன் வரை தனது படங்களில் கிரீன் மேட் மற்றும் ப்ளூ மேட் பயன்படுத்தாமல் காட்சிகளை எடுத்து வந்ததாகவும் முதன்முறையாக லியோ படத்திற்காக அந்த ரிஸ்க்கை எடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

லியோ டிரைலரில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த காட்சியாக அந்த ஹைனா காட்சியை இடம் பெற்றிருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அது இடம்பெற்றிருந்த நிலையில், சிஜி சொதப்பல் இல்லாமல் தத்ரூபமாக அந்த காட்சி படமாக்கப்பட்டது பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைவர் 171-ல் இதையெல்லாம் செய்ய போறேன்!.. லோகேஷ் சொன்ன செம சர்ப்பரைஸ்!..

படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் முன்னதாகவே அந்த காட்சிக்கான vfx பண்ண கொடுத்துவிட்டேன் என்றும் அதனால் தான் 12 மாதங்கள் டைம் எடுத்துக் கொண்டு பக்காவாக செய்துள்ளனர். நிச்சயம் படம் ரிலீசானால் அந்த காட்சி, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்றும் முழு நம்பிக்கையுடன் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

உண்மையான ஹைனாவை வைத்து படமாக்க முடியாது என்றும் அதை பயிற்சி செய்து பழக்குவது எல்லாம் முடியாத காரியம் என்றனர். அந்த அளவுக்கு கொடூரமான மிருகத்துடன் தளபதி விஜய் மோதும் காட்சி கண்டிப்பாக ரசிகர்களுக்கு திரையில் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.