சிங்கத்துக்கே சிறப்பு காட்சி இல்லையா!.. மாஸ் காட்டிய தளபதி.. லியோவுக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!..

Published on: October 11, 2023
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது தளபதி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்துக்கே கிடைக்காத சிறப்பு காட்சிக்கான அனுமதி நடிகர் விஜய் படத்துக்கு கிடைத்திருப்பதை பார்த்து இப்போவாவது புரிந்து கொள்ளுங்கள் தளபதியின் பவரை என விஜய் ரசிகர்கள் கம்பு சுற்றத் தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்க: விஜயிடம் தலைவர்171 கதையை சொன்ன லோகேஷ்…! எனக்கு இப்படி கதை பிடிக்காதுடா..!

லியோ ஆடியோ லான்ச் நடைபெறாத நிலையில், சிறப்பு காட்சிக்கும் அனுமதி வழங்கவில்லை என்றால், பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என்பதால், சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகி உள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: ரஜினியின் வில்லன் மீது இரக்கம் கொண்ட ரசிகர்கள்… அப்போ அந்த காட்சி வேணாம்… தூக்கி போட்ட படக்குழு..!

அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை தொடர்ந்து ஆயுத பூஜை பண்டிகை விடுமுறை வரும் நிலையில், சிறப்பு காட்சிக்கு தயாரிப்பாளர் லலித் குமார் அனுமதி கோரியிருந்தார். அவரது மனுவை பரிசளித்த தமிழக அரசு தற்போது 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி உள்ளது.

காலை 7 மணி முதல் லியோ முதல் காட்சி திரையிடப்படும் என அந்த அறிவிப்பின் மூலம் தெரிகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.