ரஜினியின் கெரியரில் மைல்கல்லாக இருந்த அந்த ஒரு வருஷம்! இதுவரை எந்த நடிகரும் செய்யாத சாதனை

Published on: October 13, 2023
rajini
---Advertisement---

Rajini Achievements: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். கட்டாயம் ஒரு ஹிட்டை கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்த ரஜினிக்கு ஜெயிலர் திரைப்படம் ஒரு வரப்பிரசாதமாகவே வந்து அமைந்தது.

இதுவரை தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த நடிகராகவே ரஜினி பார்க்கப்படுகிறார். அவர் செய்த சாதனைகள் பல நமக்கு தெரிந்திருந்தாலும் இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை படைத்திருக்கிறார் ரஜினி.

இதையும் படிங்க: நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்…

ஒரே வருடத்தில் 21 படங்கள் நடித்து ரசிகர்களை மிரட்டிப் பார்த்த ரஜினியை பற்றி யாருக்காவது தெரியுமா? ஆம். 1978 ஆம் ஆண்டு அந்த ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 21 படங்களில் நடித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

தமிழில் எப்படி அவ்வளவு படங்கள் நடித்தார் ரஜினி என்றுதானே கேட்கிறீர்கள்? அதுதான் இல்லை. தமிழ் உட்பட தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிப் படங்களையும் சேர்த்தே 1978 ஆம் ஆண்டு மொத்தமாக 21 படங்களில் நடித்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை.. கடன்காரனான மனோஜ்… விஜயாவை ரவுண்ட் கட்ட போகும் மூன்றாவது மருமகள்..!

மாங்குடி  மைனர், சங்கர் சலீம் சைமன், பைரவி, சதுரங்கம், என் கேள்விக்கு என்ன பதில், இளமை ஊஞ்சலாடுகிறது, ஆயிரம் ஜென்மங்கள், பாவத்தின் சம்பளம், ஜஸ்டிஸ் கோபிநாத், பிரியா, அவள் அப்படித்தான்,வணக்கத்துக்குரிய காதலியே, இறைவன் கொடுத்த வரம், தப்பு தாளங்கள்,தாய் மீது சத்தியம், முள்ளும் மலரும் போன்ற 15 தமிழ் திரைப்படங்களும்,

கன்னடத்தில் நான்கு மற்றும்தெலுங்கில் இரண்டு திரைப்படங்கள் என மொத்தம் 21 திரைப்படங்களில் நடித்து அந்த வருடத்தில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார் ரஜினி.இதுநாள் வரை ரஜினி செய்த இந்த சாதனையை வேறெந்த நடிகரும் முறியடித்ததே இல்லை என்று சொல்லபடுகிறது.

இதையும் படிங்க: ஆக்‌ஷன் சீன்ஸ் கொலமாஸ்!.. தளபதி 68-க்கு தரமான சம்பவம் பண்ணும் வெங்கட்பிரபு!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.