Cinema History
தயாரிப்பாளருக்கே சமையல் செய்து கொடுத்த எம்.ஜி.ஆர்..! ஆனா இந்த ட்விஸ்ட் தான் சூப்பரே..!
MGR: ‘அன்பே வா’ படப்பிடிப்புக்காக சிம்லா சென்றபோது எம்.ஜி.ஆருடன் இணைந்து வந்திருந்தார் ஏவி எம் சரவணன். ஆனால் அங்கு இருந்த சூழ்நிலை அவருக்கு செட்டாகவில்லை. அதனால் உடல்நிலை சரியில்லாமல் போகி விட்டதாம்.
இதனால் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. எதுவும் சாப்பிடப் பிடிக்காத நிலையில், அமைதியாக அமர்ந்திருந்து இருந்து இருக்கிறார். அப்போது பால் டம்ப்ளருடன் ஒரு கரம் அருகில் வந்தது. நிமிர்ந்து பார்த்தால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நின்று இருக்கிறார்.
இதையும் படிங்க: நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்…
ஏ.வி.எம்.சரவணன் பதற்றத்துடன் ஏன் சார் நீங்க கொண்டு வந்தீங்க? யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆரோ வேறு யாரும் கொண்டு வந்திருந்தால் சாப்பிட மறுத்து இருப்பீர்களே என்றுதான் நானே கொண்டுவந்தேன் என்றாராம்.
எம்.ஜி.ஆரின் பாசத்தினை பார்த்து நெகிழ்ந்த பாலைக் குடித்திருக்கிறார் சரவணன். படப்பிடிப்பு நடக்கும் போதும் எம்.ஜி.ஆர் சீரியசாக இருப்பாராம். மற்ற நேரங்களில் நெருக்கமானவர்களிடம் ஜாலியாகப் பேசுக் கொண்டு இருப்பாராம். இதனால் அவருக்கும் ஏ.வி.எம் சரவணனுக்கும் உள்ள நட்பு ரொம்பவே ஸ்பெஷலாம்.
25 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகரத்தின் ஷெரீப் என்று ஒரு பதவி இருந்தது. மாநகராட்சி தொடர்பான பணிகளை செய்ய வேண்டும். முக்கிய பிரமுகர்கள் சென்னை வந்தால் வரவேற்பதை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சென்னை மாநகர ஷெரீப் ஆக ஏவி.எம். சரவணனை நியமித்தார். அவரும் அந்தப் பதவிக்காலத்தை முடித்த நிலையில், மீண்டும் ஷெரீப் பதவி அவருக்கே தரப்பட்டது.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை.. கடன்காரனான மனோஜ்… விஜயாவை ரவுண்ட் கட்ட போகும் மூன்றாவது மருமகள்..!
மரியாதை நிமித்தமாக எம்.ஜி.ஆர்ரை ஏவி.எம். சரவணன் சந்தித்தார். மக்கள் திலகத்திடம் ஏன் சார்? போன முறையே இந்தப் பதவியில் நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையே? எதற்கு மீண்டும் ஒருமுறை என்று கேட்டிருக்கிறார். சரவணன் சிரித்து கொண்டே அப்படி கேட்க, எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். ‘அதனால்தான் இன்னொரு முறை!’.