Connect with us

Cinema News

அய்யோ போச்சே!.. மோடி ஸ்டேடியத்தில் லெஜண்ட் லேடியிடமே வேலையை காட்டிடாங்களா!.. கதறும் ஊர்வசி!..

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கிருந்தே இன்ஸ்டாகிராமில் எடுத்த வீடியோக்களை பதிவிட்டு சீன் காட்டி வந்தார் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா தொடர்ந்து பல இந்தி படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அனிருத் போட்ட ஒற்றை போஸ்டர்!.. ஆல் தளபதி ஃபேன்ஸும் ஹேப்பி.. அதே சம்பவம் லியோவிலும் உறுதி!..

கிரிக்கெட் ரசிகையான ஊர்வசி ரவுத்தேலா நேரடியாக மைதானத்துக்கு சென்று விளையாட்டை பார்த்த ஆர்வத்தில் வீடியோவை எல்லாம் எடுத்து போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்தார்.

இந்நிலையில், அவர் வந்திருப்பதை நோட்டம் போட்ட சிலர் ஊர்வசி ரவுத்தேலாவின் 24 கேரட் தங்க ஐபோனை அவரிடம் இருந்து ஆட்டையைப் போட்டுள்ளதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் 7: இந்த சீசனோட வெஷபாட்டில் இவர்தான்!.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

கிரிக்கெட் மைதானத்தில் தனது ஐபோன் காணாமல் போய் விட்டதாகவும், அது 24 கேரட் தங்கத்தினாலான ஐபோனை தொலைத்து விட்டேன். யாராவது அந்த ஐபோனை பார்த்திருந்தாலோ, எடுத்திருந்தாலோ கொடுத்து விடுங்கள் அதில் விலை மதிப்பற்ற பல கான்டாக்ட் லிஸ்ட் இருக்கு என கோரிக்கை விடுத்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.

மேலும், இதுதொடர்பாக போலீஸிலும் புகார் அளித்துள்ளார். ஊர்வசி ரவுத்தேலாவை போல சுமார் 60 பேரின் ஸ்மார்ட்போன்கள் காணாமல் போயிருப்பதாகவும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

கையில் இருக்கும் ஐபோன் எப்படி திருடுப் போனது என்றும் பாதுகாவலர்களுடன் செல்லவில்லையா ஊர்வசி என நெட்டிசன்கள் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top