லியோ ஷூட்டிங்கில் விஜயுடன் யுடியூபர் இர்பான்!.. கொல மாஸ் ஃபீலிங்!.. நடந்தது இதுதான்!..

Published on: October 16, 2023
vijay
---Advertisement---

Ifran vijay: யுடியூப்பில் பல ஓட்டல்களுக்கும் சென்று அங்கிருக்கும் உணவு பற்றி ரிவ்யூ செய்து வீடியோ போட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இர்பான். சாஃப்ட்வேர் துறையில் இருந்த இர்பான் தனது வேலையைவிட்டு யுடியூப் சேனல் துவங்கி இப்போது பலரிடம் ரீச் ஆகியிருக்கிறார். இவரின் சேனலுக்கு 3.76 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவையும் பல லட்சம் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவகங்களில் செய்யப்பட்டும் உணவை ரிவ்யூ செய்வார். பல துறைகளிலும் பிரபலமாக இருப்பவர்களுடன் இவர் வீடியோ போட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமும் நடந்தது. இந்நிலையில், திடீரென லியோ படப்பிடிப்பில் விஜயை சந்தித்தேன் என சொல்லி ஒரு புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நான் இப்ப அதுக்காக வரல!. லியோ பட கேள்வியால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்.. இது தேவையா பாஸ்!.

லியோ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இர்பான் வெளியிட்ட இந்த புகைப்படம் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அதன்பின் இதுபற்றி வீடியோ போட்டுள்ள இர்பான் அதில் ‘நான் வீடியோ போட காஷ்மீர் சென்றிருந்தேன். அப்போது அங்கு லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அந்த படத்தில் வேலைசெய்து வந்த ஜெகதீஷ் எனக்கு நல்ல நண்பர். எனவே, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். திடீரென என் எதிரே விஜய் வந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் 90 கிட்ஸ் என்பதால் அவரின் திரைப்படங்களை பார்த்தே வளர்ந்தவன். அவர் முன்னாடி நிற்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

leo2

அதோடு, என்னை தெரியும் எனவும் என் வீடியோக்களை பார்த்திருப்பதாகவும் சொன்னார். நான் பார்த்து வியந்த ஒருவருக்கு என்னை தெரியும் என்பது எவ்வளவு பெரிய விஷயம். என்னை பற்றி சில விஷயங்களை விசாரித்துவிட்டு அவர் ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அதன்பின் படப்பிடிப்பில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டேன். பல வகைகளில் உணவுகள் சிறப்பாக இருந்தது.

அதன்பின் அடுத்த நாளும் என்னிடம் விஜய் பேசினார். திடீரென என்னை அழைத்து என் தோளில் கைப்போட்டு போட்டோவும் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் அந்த புகைப்படம் எனக்கு கிடைத்தது. காஷ்மீரில் விஜயை சந்தித்ததும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும், அவருடன் கொஞ்ச நேரம் செலவழித்ததும் ஒரு சூப்பர் ஃபீலிங்காக இருந்தது’ என இர்பான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அப்புறம் என்னங்க அவரே சொல்லிட்டாரே… விஜய்க்காக இறங்கி வந்த சூப்பர்ஸ்டார்..! ஷாக்கான ரசிகர்கள்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.