Connect with us

Cinema News

அது வேற வாய்.. இது நாற வாய்.. மீசை எடுக்க முடியாது!.. அந்தர் பல்டி அடித்த மீசை ராஜேந்திரன்!..

லியோ ஜெயிலர் படத்தின் வசூலை முந்திவிட்டால் தனது மீசையை எடுத்துக் கொள்கிறேன் என சவால் விட்ட ரஜினி ரசிகரும் நடிகருமான மீசை ராஜேந்திரன். தற்போது லியோ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனை பார்த்து தனது மீசையை எடுக்க முடியாது என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ள மீசை ராஜேந்திரன் நீங்க என் மீசையை பத்தி தான் கேட்பீங்க, ஆனால், நான் எடுக்க மாட்டேன் என எடுத்த எடுப்பிலேயே கூறிய அவர், லியோ திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் மற்றும் 2.0 படங்களின் வசூலை முறியடிக்காது என 2.0 படத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் அப்படியே பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..

லியோ படத்தின் கலெக்‌ஷன் அதிகமாக இருப்பதாக சொல்றாங்களே என்கிற கேள்விக்கு விஜய் சாரே என்னோட படம் 800 கோடி வசூலை தாண்டி விட்டதுன்னு சொல்லட்டும் அப்போது என் மீசையை எடுக்கிறேன். அதுவரை எடுக்க மாட்டேன் என ஜெயிலர் படத்தின் 525 கோடி வசூலை விட்டு விட்டு 2.0 படத்தின் 800 கோடி வசூல் பக்கம் சென்று அந்தர் பல்டி அடித்துள்ளார் மீசை ராஜேந்திரன்.

மேலும், லியோ படம் குப்பை மாதிரி இருக்கு, கண்டிப்பா பெரிய வசூல் சாதனை படைக்காது. ஒரு அம்மா இவனோட மீசையை எடுத்தா வளர்ந்துடும் கை காலை எடுக்கணும்னு சொல்றாங்க, அவங்க மேல நான் கேஸ் கொடுத்தா விஜய்யா வந்து காப்பாத்துவாரு என பயங்கரமாக டென்ஷன் ஆகிவிட்டார்.

எதுக்கு வாயக் கொடுத்து கண்ட இடத்தை புண்ணாக்கிக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமன்னா காட்டுனா மட்டும் பாப்பீங்களா? சென்சாரை கிழித்தெடுத்த மன்சூர் அலிகான்

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top