Cinema News
பாலா முன்னாடி மீசையை முறுக்கிட்டு நின்னா சும்மா விடுவாரா? படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட நிலைமை
Director Bala: தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் பாலா. கதைக்காக இவர் மெனக்கிடுவதிலும் நடிகர்களை மெனக்கிட வைப்பதிலும் பாலாவுக்கு நிகர் பாலாதான். நடிப்பிற்காக எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் போய் தொட்டு வரச் சொல்லக் கூடியவர்.
இவர் படத்தில் நடிக்க திறமைசாலியான நடிகர் இருந்தால் மட்டும் போதாது மனதை கல்லாக்கிக் கொண்டும் படத்தில் நடிக்க வேண்டும். அந்தளவுக்கு நடிகர் , நடிகைகளை படாதபாடு படுத்தி ஒரு வழியாக அவர் எதிர்பார்த்ததை வாங்கிவிடுவார்.
இதையும் படிங்க: தோளில் காக்கிப்பை!.. 28 ரூபாயில் சிறிய வாடகை ரூம்!.. சினிமாவுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா ரஜினி?…
எல்லாம் சினிமா மீது பாலாவுக்கு இருக்கும் ஒரு அதீத காதல்தான் காரணம். அதனாலேயே பாலாவின் படம் என்றாலே யோசிக்கக் கூடிய நடிகர்கள் ஏராளம். ஆனால் பாலாவின் படத்தில் நடித்துவிட்டால் வேறு எந்த படத்திலும் எந்த இயக்குனராக இருந்தாலும் அவர்களுடன் வேலை பார்ப்பது என்பது எளிதாகிவிடும்.
இந்த நிலையில் பாலாவை பற்றி ஒரு பேட்டியில் விஜய் டிவி புகழ் அமுதவாணன் சில விஷயங்களை பகிர்ந்தார். அமுதவாணன் பாலாவின் தார தப்பட்டை என்ற படத்தில் நடித்திருக்கிறார். முதன் முதலில் அமுதவாணனை பார்த்ததும் பாலா ‘என்ன பண்ணிட்டு இருக்க’ என்று வழக்கமான அவர் பாணியில் கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: நான் அப்படி செஞ்சிருக்கவே கூடாது! அத்தனை பேர் இருக்கிற இடத்துல விஜயை உதாசீனப்படுத்திய நடிகர்!
விஜய் டிவியில் மிமிக்ரி, காமெடி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்ல எங்க என் சித்தப்பன் மாதிரி மிமிக்ரி செய்து காண்பி என்று கேட்டிருக்கிறார். உங்க சித்தப்பா மாதிரி என்னால எப்படி சார் பண்ண முடியும்? என்று சொல்லியிருக்கிறார்.
உடனே சரி சூர்யா மாதிரி பேசிக் காட்டு என சொல்ல தொடர்ந்து அமுதவாணனின் திறமைகளை பார்த்துக் கொண்டே இருந்தாராம் பாலா. கூடவே அமுதவாணன் பேசும் போது அவரது மீசையை முறுக்கிக்கிட்டு தடவிக்கிட்டு பேசிக் கொண்டிருக்க,
இதையும் படிங்க: மொக்க காரணத்துக்காக சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்!… தட்டி தூக்கிய பார்த்திபன்..!
சரி நாளைக்கு வரும் போது அந்த மீசையை எல்லாம் முழுக்க எடுத்துடு என சொன்னதும் அமுதவாணனுக்கு ஷாக். இருந்தாலும் படத்திற்காகத்தானே என சொல்லி சரி என தன் தலைமுடியை ரஜினி ஸ்டைலில் வாரிக் காட்டி சொல்லியிருக்கிறார்.
அதையும் பார்த்த பாலா நாளைக்கு இந்த முடியையும் கட் செய்துவிட்டு ஸ்ட்ரைட்னர் பண்ணிட்டு வா என செந்தில் ஹேர் ஸ்டைலில் வரச் சொன்னாராம் பாலா.