மொக்க காரணத்துக்காக சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்!… தட்டி தூக்கிய பார்த்திபன்..!

Published On: October 21, 2023
| Posted By : Akhilan

Karthi Parthiban: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு கிடைக்க இருந்த நல்ல படத்தினை கூட சாதாரண காரணங்களால் மிஸ் செய்து விடுவார். ஆனால் அது அப்படத்தினை ரிலீஸாகி பார்க்கும் போது தான் அவர்களுக்கு பெரிய கவலையாக இருக்கும்.

பல டாப் ஹிட் நடிகர்கள் பெரும்பாலும் பேட்டியில் அவர்கள் சொல்லும்போது தான் இப்படி ஒரு கதையை எப்படி வேண்டாம் எனக் கூறினார்கள் என ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அப்படத்தினை அவர்கள் மிஸ் செய்தது படக்கதையை கேட்டு  மட்டுமே இருக்காது.

இதையும் படிங்க: மீனாவை மொத்தமாக துரோகியாக்கிய ரவி… ஹனிமூனில் எஞ்சாய் செய்யும் ஸ்ருதி..! கடுப்பாக முத்து..

அதற்கு பல காரணம் இருந்து இருக்கும். சிலருக்கு கால்ஷீட் பிரச்னை இருக்கும். ஒரு சில இயக்குனர்கள் மொத்த கதையை 10 நிமிடத்தில் சொல்லுவார்கள். அது பலருக்கு அத்தனை நல்லா இருக்காது. முழுமையாக பார்க்கும் போது கதை மிகப்பெரிய அளவில் வரவேற்பினை கொடுக்கும்.

இந்நிலையில் இப்படி பிரச்னையை தான் சேரனின் நான்காவது படமும் சந்தித்ததாம். பாரதி கண்ணம்மா திரைப்படம் தான் அது. 1997ம் ஆண்டு உருவான இப்படத்தில் பார்த்திபன் மற்றும் மீனா நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு பாடல் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இந்த படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்க சேரன் விரும்பினாராம். படத்தின் தயாரிப்பாளர் இந்த கதையை கார்த்திக்கிடம் சொல்ல அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. இதனால் அவர் நடிக்க ஓகே சொல்லி விடுகிறார். ஆனால் அங்கு தான் நடந்தது ட்விஸ்ட்.

இதையும் படிங்க: கதையே இல்லாமல் உருட்டும் பாக்கியலட்சுமி டீம்.. மீண்டும் வீட்டுக்கு வரும் கோபி…! மீண்டும் மீண்டுமா?

அட்வான்ஸ் கொடுக்க கூட காசு இல்லாத தயாரிப்பாளர் மும்பை சென்று காசு எடுத்து வந்தாராம். ஆனால் அந்த நேரத்தில் கார்த்திக்கின் கால்ஷூட் நிரம்பி விட்டதாம். அதை தொடர்ந்தே அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. பார்த்திபனுக்கு அந்த வாய்ப்பு சென்றதாக கூறப்படுகிறது.`