Connect with us

latest news

மீனாவை மொத்தமாக துரோகியாக்கிய ரவி… ஹனிமூனில் எஞ்சாய் செய்யும் ஸ்ருதி..! கடுப்பாக முத்து..

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்டேஷனில் ரவி, ஸ்ருதிக்கு திருமணம் ஆகி விட்டதாக விஷயம் தெரிய அனைவருக்கும் அதிர்ச்சி ஆகிவிடுகிறது. இதையடுத்து அதில் மீனா தான் கையெழுத்து போட்டார் என்ற தகவலால் முத்துவுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறுகிறது.

இதையடுத்து வாசுதேவன், லாக் அப்பில் இருக்கும் அண்ணாமலையிடம் வந்து என்னமோ பிள்ளைய சூப்பரா வளர்த்தேன். என் பேச்சை மீற மாட்டேனு சொன்ன. நல்ல வளர்த்து இருக்க என காரி துப்பி விட்டு செல்கிறார். இதனால் அண்ணாமலைக்கு மேலும் அவமானமாகி விடுகிறது.

இதையும் படிங்க: வாரேவா!.. லியோ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!.. தயாரிப்பாளருக்கு போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா?..

மீனாவிடம் வந்து நீ தான் கல்யாணத்துக்கு கையெழுத்து போட்டியா எனக் கேட்கிறார் முத்து. அவரும் ஆமாம் எனச் சொல்லியவுடன் கடுப்பில் அறைந்து விடுகிறார். எனக்கே துரோகம் செஞ்சிட்டீல. உன்னை பாத்துக்க சொல்லிட்டு போன இப்படியா பண்ணி வைப்ப. வெளியே போ எனக் கூறி கோபப்படுகிறார்.

சீதா என்னை மன்னிச்சிடுக்கா. இப்படி நடக்கும் என நானும் நினைக்கல. நான் வேணா மாமாவிடம் பேசட்டா எனக் கேட்கிறார். மீனா வேணாம் உனக்கு அடி தான் விழும். சும்மா இரு என அடக்குகிறார். பின்னர் சீதாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதையடுத்து அண்ணாமலையை விடக்கூறி முத்து எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார். ஆனால் ரவி வந்தால் தான் விடுவோம் எனக் கூறி விடுகின்றனர். அதே நேரத்தில் மீனாவிடம் வந்த கான்ஸ்டபிள் அந்த பொண்ணு வந்து கடத்தவில்லை என சொன்னா தான் அவரை விடுவாங்க எனக் கூறி செல்கிறார்.

இதையும் படிங்க: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி!.. 2ம் நாளில் அப்படியே பாதியாக குறைந்த லியோ வசூல்?.. ஜெயிலரை முந்துமா?..

இந்த நேரத்தில் ஸ்ருதி, ரவி ஒரு கெஸ்ட் அவுஸுக்கு வந்து தங்கி விடுகின்றனர். அங்கிருந்து கிளம்பிய ப்ரண்டிடம் எங்க வீட்டுல விசாரித்த சமாளிச்சிக்கோ எனக் கூறி விடுகிறார். இதையடுத்து ரவியின் முகம் வாடி இருக்கிறது. எல்லாம் சரி ஆகிடும். மீனாக்கு பிரச்னை எல்லாம் வராது என ஸ்ருதி சமாதானம் செய்கிறார்.

ஸ்டேஷனில் இருக்கும் விஜயா, மீனாவை திட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் தானே உன்னை கூட்டி வந்து கல்யாணம் செஞ்சி வச்சாரு. இப்படி அவரையே ஸ்டேஷனில் உட்கார வச்சிட்டியே என அழுது புலம்புகிறார். மீனாவை திட்டி அனுப்பி விடுகிறார் முத்து. அனைவரும் கவலையுடன் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top