எம்ஜிஆரை இதுவரை இப்படி யாரும் புகழ்ந்திருக்க மாட்டாங்க! போட்டி இருந்தாலும் உண்மையான பாசத்தை காட்டிய கலைஞர்

Published on: October 25, 2023
mgr
---Advertisement---

MGR vs Karunanithi:  நம்மைப் பொறுத்தவரைக்கும் எம்ஜிஆர், கலைஞர் என்றால் எதிரிகள்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் இருவருக்கும் இடையில் உள்ள நட்பையும், பாசத்தையும் இறுதிவரை யாராலும் அசைக்க முடியவில்லை.  நீயா நானா என்ற போட்டியைத்தான் ரசிகர்களாகிய மக்கள் பார்த்துள்ளனர்.

கலைஞரும் எம்ஜிஆரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்கள்.ராஜகுமாரி என்ற படத்தின் மூலம்தான் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். ஆனால் அப்போது அவர்களுக்கே தெரியாது இந்த தமிழகத்தை நாம்தான் ஒரு காலத்தில் ஆளுவோம் என்று.

இதையும் படிங்க: சைக்கோவா நீ…! மாலினி செய்த வேலையை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..! அதுக்கு தான் வெறும் பெட்டு போல..!

ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு  மிகப்பெரிய ஆளுமைகளாக இருவரும் உருவெடுத்தனர். இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். எம்ஜிஆர் படங்களுக்கு ஒரு  கூட்டம் என்றால் புரட்சிகரமான கலைஞர் வசனத்திற்காக ஒரு  கூட்டம் அலைமோதியது.

இருவருக்குமான வாக்குவாதத்தை பற்றி ஒரு முறை கருணாநிதியே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அண்ணாவின் தீவிர பற்றாளராக இருந்தவர் கலைஞர். எம்ஜிஆரோ மகாத்மா மீது அதிகம் பற்று கொண்டவராக இருந்தார். கருணாநிதி எம்ஜிஆருக்கு அண்ணாவின் புத்தகத்தை பரிசாக கொடுத்தால் கலைஞருக்கு மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட புத்தகத்தை பரிசாக கொடுப்பாராம் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: நிஜத்திலும் வில்லன்தான்.. ஜெயிலர் பட வில்லன் கைது!.. அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

இப்படி இவர்களின் வாக்குவாதம் கழகத்திலேயே ஆரம்பமானது என கருணாநிதி ஒரு சமயம் கூறினாராம். இந்த நிலையில் எம்ஜிஆர் மீது கலைஞர் எந்தளவு பாசம் வைத்திருந்தார் என்பதை ஒரு சம்பவம் எடுத்துரைக்கிறது. எம்ஜிஆர் அண்ணனான சக்கரபாணி இல்லத்திருமண விழாவிற்கு அரசியல் பெரும்புள்ளிகளில் இருந்து பிரபலங்கள் வரை அனைவரும் கலந்து கொண்டார்களாம்.

அப்போது மணமக்களை வாழ்த்த வந்த கலைஞர் ‘ எப்படி இவர்களை வாழ்த்துவது என்று தெரியவில்லை. நகமும் சதையும் போல் என்று சொன்னால் சதையை விட நகம் வளர்ந்து நிற்கும். அதனால் அதை சொல்ல இயலாது. மலரும் மணமும் போல் என்று சொன்னால் இப்போதுள்ள மலர்கள் மணமாகவே வருவதில்லை’ என்று சொல்லிவிட்டு,

இதையும் படிங்க: அடிதூள்!.. நல்ல நாள் அதுவுமா அடுத்த பிசினஸை ஆரம்பிச்சிட்டாரே நயன்தாரா!.. என்ன தொழில்னு பாருங்க!..

எம்ஜிஆரும் அவருடைய புகழைப்போல் நீங்கள் வாழ வேண்டும் என்று சொன்னாராம் கலைஞர். இதிலிருந்து எம்ஜிஆர் மீது எந்தளவும் பாசத்தை வைத்திருந்தார் என்பது தெரியும்.

 

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.