
Cinema News
சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…
Published on
By
Mgr Sarojadevi: எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் அவருடன் அதிகமாக நடித்த நடிகைகள் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகிய மூவரும்தான். எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கிய சமயத்தில் பானுமதியுடன் சில படங்களில் நடித்தார். சொந்த தயாரிப்பில் நாடோடி மன்னன் படத்தை எடுத்தபோதும் அவரையே கதாநாயகியாக நடிக்கவைத்தார்.
ஆனால், காட்சிகளை திரும்ப திரும்ப எம்.ஜி.ஆர் எடுத்ததால் கோபமடைந்த பானுமதி எம்.ஜி.ஆருடன் வாக்குவாதம் செய்தார். ‘நான் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். எனக்கு திருப்தி ஏற்படும் வரை எடுப்பேன். உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் விலகிக்கொள்ளுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்ல அப்படத்திலிருந்து பானுமதி விலகினார்.
இதையும் படிங்க: கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…
அதன்பின் திரைக்கதையில் அவர் இறந்துபோவது போல் காட்டப்பட்டு அவருக்கு பதில் சரோஜாதேவி நடித்தார். அதை மக்களும் ஏற்றுக்கொண்டனர். அதன்பின் எம்.ஜி.ஆரின் படங்களில் தொடர்ந்து சரோஜாதேவி நடித்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவுடன் எம்.ஜி.ஆர் நடித்தார்.
அந்த படம் வெற்றி பெற்ற பின்னரும் தொடர்ந்து அவர் சரோஜாதேவியுடன் நடித்து வந்தார். அப்படி எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி இயக்கிய ‘அரச கட்டளை’ படத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்தனர். அப்போதுதான் எம்.ஜி.ஆரின் கழுத்தில் குண்டுபாய்ந்த சம்பவம் நடந்தது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..
எம்.ஜி.ஆர் அவ்வளவுதான் இனிமேல் நடிக்க மாட்டார். அப்படியே நடித்தாலும் பழையபடி அவரால் வசனம் பேசமுடியாது என திரையுலகில் பேச துவங்கினார்கள். அப்படி பேசியவர்களில் சரோஜாதேவியும் ஒருவர் என எம்.ஜி.ஆருக்கு செய்தி போனது. மேலும், ‘இனிமேல் என் மகள் எம்.ஜி.ஆருடன் நடிக்கமாட்டாள்’ என சரோஜாதேவியின் அம்மா பேட்டியே கொடுத்தார்.
இதில் அதிருப்தியடைந்த எம்.ஜி.ஆர் அரச கட்டளை படத்திலிருந்து சரோஜாதேவியை தூக்கிவிட்டு ஜெயலலிதாவை நடிக்க வைத்தார். நாடோடி மன்னன் படம்போலவே, இந்த படத்தில் சரோஜாதேவி கதாபாத்திரம் இறந்துபோனதாக காட்டப்பட்டது. அதன்பின் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் மட்டுமே தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....