கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..

Published on: October 30, 2023
napolean
---Advertisement---

Actor karthi: தமிழ் சினிமாவில் ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்பட மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படத்திலேயே வில்லன் மற்றும் வயதான வேடம் என்றாலும் நன்றாகவே நடித்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். வில்லனாக பல படங்களில் கலக்கியிருக்கிறார். ரஜினி நடித்த எஜமான் படத்திலும் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார்.

ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறினார். அதில், சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே, தமிழச்சி ஆகிய படங்கள் முக்கியமான படங்களாகும். ஒருகட்டத்தில் வயதானதும் குணச்சித்திர நடிகராக மாறினார். கமல் எழுதி, இயக்கி நடித்த விருமாண்டி படத்திலும், தசாவதாரம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி முதன்முதலாக அதிக சம்பளம் வாங்கிய திரைப்படம் எது தெரியுமா?… இத வாங்குறதுக்கு மனுஷன் பட்ட பாடு இருக்கே….

இவரின் மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்க வேண்டியிருந்ததால் அங்கேயே ஒரு வீடு கட்டி செட்டிலாகிவிட்டார். இவர் படித்தது எல்லாம் திருச்சியில்தான். அமைச்சர் நேருவின் உறவினர் இவர். அரசியலில் ஈடுபாடு கொண்ட நெப்போலியன் பல வருடங்கள் திமுகவில் தீவிரமாக செயலாற்றி வந்தார். திமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். சுல்தான் படத்தில் கார்த்தியின் அப்பாவாகவும், சீமராஜ படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாகவும் நடித்திருந்தார்.

இப்போது அரசியல், சினிமா என அதிலும் அதிக ஆர்வமில்லாமல் அமெரிக்காவில் விவசாயம் செய்து வருகிறார். அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகிறார். நெப்போலியனும், நடிகர் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாது.

1993ம் வருடம் நெப்போலியனுக்கு திருமணம் நடந்தது. அப்போது கார்த்திக் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் நெப்போலியனின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த கார்த்திக்!.. அவருக்கு பதில் நடித்த பிரபல ஹீரோ!..

எனவே, அவர் முத்துக்காளை படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் இருந்தபோது அதே ஊரில் படப்பிடிப்பில் இருந்த பிரபு, சத்தியராஜ் ஆகிய நடிகர்கள் மற்றும் அந்த படங்களில் வேலை செய்து வந்த தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து அங்கேயே ஒரு ரிசப்ஷனை நடத்தியுள்ளார் நெப்போலியன்.

இதில் கார்த்திக் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நெகிழ்ந்து போய்விட்டார்கள். மேலும், நெப்போலியனையும், அவரின் மனைவியையும் மனதார வாழ்த்தினார்களாம்.

இதையும் படிங்க: மொக்க காரணத்துக்காக சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண கார்த்திக்!… தட்டி தூக்கிய பார்த்திபன்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.