Connect with us
bhagyaraj

Cinema History

ஷுட்டிங்கிற்கு தயாரான கதை… கடைசில கதையையே மாற்றிய பாக்கியராஜ்… எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!..

பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். இவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட. பல வெற்றி திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையும் பெற்றார். மேலும் பல நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பினை வழங்கியவர்.

இவர் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும் இப்படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். பின் தொடர்ந்து சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதையும் வாசிங்க:ரஜினி முதன்முதலாக அதிக சம்பளம் வாங்கிய திரைப்படம் எது தெரியுமா?… இத வாங்குறதுக்கு மனுஷன் பட்ட பாடு இருக்கே….

பின் சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். பின் இவர் அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்ற பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் இருந்தார். இவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் ஒரு தனித்தன்மை இருக்கும்.

இவர் பொதுவாக தனது படங்களின் கதையில் திருப்தி இருந்தால் மட்டுமே படத்தினை இயக்க ஆரம்பிப்பாராம். இது மாதிரியான ஒரு சம்பவம் இவரது சினிமா வாழ்க்கையில் நடந்துள்ளது. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் அம்மா வந்தாச்சு. இத்திரைப்படத்தில் இவரிடம் உதவி இயக்குனராய் பணியாற்றியவர்களில் ஒருவர் இயக்குனர் நந்தகுமார்.

இதையும் வாசிங்க:என்னிடம் ரஜினி வாய் விட்டு கேட்டது இது ஒன்னை தான்.. வைரமுத்து சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

ஒரு நாள் இரவு 1 மணியளவில் பாக்கியராஜ் அவரிடம் துணை இயக்குனராய் பணியாற்றியவர்களை அழைத்து தன்னிடம் ஒரு கதை இருப்பதாகவும் அதனை கேட்க வரமுடியுமா என கேட்டுள்ளார். அவர்களும் சரி என கூறிவிட்டு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் ஒரு கதையை 2 மணி நேரமாக கூறியுள்ளார். அப்போது நந்தகுமார் அக்கதையின் இரண்டாம் பாகம் ஒரு சில கதாபாத்திரங்களினால் நன்றாக இல்லை என கூறியுள்ளார்.

அந்த கதை ஷூட்டிங்கிற்கு தயாராக இருந்த கதையாம். ஆனால் நந்தகுமார் கூறியதை மனதில் வைத்து கொண்ட பாக்கியராஜ் பின்னர் அப்படத்தின் முழு கதையையும் மாற்றி விட்டாராம். அப்படி அவர் மாற்றிய கதைதான் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான ராசுக்குட்டி திரைப்படம். அப்படம் வெளியானபின் பாக்கியராஜ் நந்தகுமாருக்கு கால் செய்து அப்பட நன்றாக வந்துள்ளதா என கேட்டாராம். அனைவருக்கும் தான் இயக்கிய படம் திருப்தியாய் இருக்க வேண்டும் என நினைப்பாராம். இப்படம் பாக்கியராஜுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் வாசிங்க:ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் டிடி பார்த்த வேலை! கடுப்பாகி உட்கார்ந்த கார்த்தி

google news
Continue Reading

More in Cinema History

To Top