சிலுக்குக்கே டஃப் கொடுக்க நினைத்த பிரபல நடிகை… ஆமாம்பா… உண்மையிலேயே செம போட்டிதான்…

Published on: October 31, 2023
silksumitha
---Advertisement---

தமிழ் சினிமாவின் கவர்ச்சிநாயகியாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவர் பல திரைப்படங்களில் நடனமாடியும் பின் நடித்தும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினர். தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல பட வாய்ப்புகளையும் பெற்றார். ஆனால் இவரால் சில ஆண்டுகள்தான் சினிமாவில் நிலைக்க முடிந்தது. இவர் சில சொந்த காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார்.

இவரை போலவே வசீகர கண்களை கொண்டவர்தான் பானுபிரியா. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இருந்ததில்லையாம். பள்ளியில் படிக்காமல் இருக்க பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும், கலந்து கொள்வாராம். பின் இவரது பெற்றோரும் சரி ஏதாவது ஒரு விதத்தில் திறமை இருந்த போதும் என எண்ணி அவரை படிப்பதற்காக கட்டாயப்படுத்தவில்லையாம்.

இதையும் வாசிங்க:‘மங்காத்தா’ படத்தில் முதலில் யார் நடிக்க வேண்டியது தெரியுமா? ஷாக் கொடுத்த பிரபலம்

பின் இயக்குனர் பாக்கியராஜிடம் படவாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். ஆனால் பாக்கியராஜ் இவரை சிறு குழந்தையாய் இருப்பதாகவும் 10ஆம் வகுப்பினை முடித்துவிட்டு வரும்படியும் கூறிவிட்டாராம். பின் இவர் மெல்ல பேசுங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களை தவிர இவர் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவரின் உயரமான தோற்றத்தினால் இவர் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சினிமாவில் 80ஸ் 90ஸ்களில் நடித்த அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் புது மனிதன், ஆராரோ ஆரிராரோ, பங்காளி போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமாவின் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினார்.

இதையும் வாசிங்க:கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..

இவர் தனக்கு திருமணமானதும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் சில ஆண்டுகளுக்கு பின் இவர் சின்னத்திரை நாடகங்களிலும் நடிக்க தொடங்கினார். பெண், வாழ்க்கை போன்ற நாடகங்களின் மூலம் சின்னத்திரையிலும் வலம் வந்தார்.

இவரின் கண்களும் ரசிகர்களை கட்டி போட்டது. இவர் கிட்டதட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். எடுப்பான தோற்றம் காந்த பார்வை என அக்கால இளைஞர்களை மயக்கியவர் நடிகை பானுபிரியா.

இதையும் வாசிங்க:இனி எல்லா படத்துலையும் இது இருக்கும்… திட்டவட்டமாக சொன்ன லோகேஷ்.. இதை லியோவில் கவனிச்சீங்களா..?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.