Connect with us
ajith

Cinema News

‘மங்காத்தா’ படத்தில் முதலில் யார் நடிக்க வேண்டியது தெரியுமா? ஷாக் கொடுத்த பிரபலம்

Ajith Mankatha Movie: தமிழ் சினிமாவில் அஜித் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.  நடிகர்களிலேயே அஜித்துக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தை தல என்று அன்போடு அழைத்து வரும் ரசிகர்களை அஜித் சந்திக்கவில்லை என்றாலும் அஜித் மீது கொள்ளை பிரியம் காட்டி வருகின்றனர்.

அஜித்தின் படங்களை ஒரு திருவிழாப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். அவர் நடித்த படங்களில் பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது அஜித்தின் 50வது படமான மங்காத்தா திரைப்படம்தான். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் நீ வேறலெவல்!.. ரேஷ்மாவிடம் மயங்கும் புள்ளிங்கோ!..

பட முழுவதும் வில்லனாகவே தன்னை காட்டியிருப்பார் அஜித். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்த நேரத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கே அஜித்துக்கு சல்யூட் அடிக்கலாம். அதையும் மீறி மங்காத்தா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பில்லா படத்திற்கு பிறகு அஜித்தின் கெரியரில் மிக முக்கிய படமாக மங்காத்தா அமைந்தது. இதில் இன்னொரு வில்லனாக அர்ஜூன் நடித்திருப்பார். அஜித்தும் அர்ஜூனும் மோதும் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கும்.

இதையும் படிங்க: பார்க்க கண்கொள்ளா காட்சியா இருக்கே! அனிருத் வீட்டில் குவிந்த அஜித் ஃபேமிலி

இந்த நிலையில் கங்கை அமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மங்காத்தா திரைப்படத்தை பற்றி கூறியிருந்தார். அதாவது மங்காத்தா திரைப்படத்தின் கதை கங்கை அமரன் கதையாம். அதை வெங்கட் பிரபுவிடம் கொடுத்து நீயோ உன் பெயரிலேயே இதை படமாக எடுத்துக் கொள் என்று கூறி கொடுத்துவிட்டாராம்.

படத்தின் கதைப்படி இரண்டு வில்லன்கள் தேவைப்பட்டார்களாம். ஆனால் அஜித்தை வைத்து இந்தக் கதை எழுதவில்லை என்று கங்கை அமரன் கூறினார். அதனால் அஜித்  முதலில் நடிப்பதாக இல்லையாம். அதன் பின் இந்த கதையை கேட்டுவிட்டு அஜித்தே நேரடியாக வெங்கட் பிரபுவை அழைத்து ஏதோ கதை வைத்திருக்கிறாயாமே?  நான் நடிக்கிறேன் என்று தானாக வந்தாராம் அஜித்.

இதையும் படிங்க: ஏப்பா லவ் பண்ணத்தான் அங்க போனீங்களா?!. எல்லை மீறிப்போகும் பிக்பாஸ் லீலைகள் – வைரலாகும் புகைப்படம்

google news
Continue Reading

More in Cinema News

To Top