இவ்வளவு படங்களை தயாரிச்ச ஏவிஎம் நிறுவனம் அத மட்டும் பண்ணதே இல்லை!.. ஏன் தெரியுமா?..

Published on: November 7, 2023
avmeyyappan
---Advertisement---

AVM: எந்தவொரு திரைப்படமானாலும் அதன் பட்ஜெட் என்பது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட பட்ஜெட்டை தீர்மானிப்பது தயாரிப்பாளர்தான். அவரே படத்திற்கு முதலீடு செய்பவர். அந்த காலம் முதல் இந்த காலம் வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் புகழ் பெற்றவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். இவர் தமிழில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் 1945ஆம் ஆண்டு தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். சென்னையில் வடபழனியில் இருக்கும் ஏவிஎம் உருண்டைதான் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அடையாளம்.

இதையும் வாசிங்க:நடிப்பை பார்த்து வாலி அடித்த கமெண்ட்!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்!.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!..

தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் படங்களை தயாரித்துள்ளனர். இவர் சிவாஜி, எம்ஜிஆர் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். அதே கண்கள், பராசக்தி, அன்பே வா போன்ற பல திரைப்படங்களை தயாரித்தார்.

இது மட்டுமல்லாமல் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் நடித்த பல திரைப்படங்களையும் தயாரித்தார். இவரின் மகன்தான் ஏவிஎம் சரவணன். தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தை அவருக்கு பின் இவர்தான் கவனித்து கொண்டார். இவர் சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி:தி பாஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இதையும் வாசிங்க:அண்ணனிடம் ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட கங்கை அமரன்… தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த இசைஞானி…

இவ்வளவு படங்களை தயாரித்த இவர்கள் இதுவரையிலும் ஒரு படத்தினை கூட இயக்கியதில்லை. இதன்பின் இருக்கும் ரகசியத்தை ஏவிஎம்சரவணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இவர் ஒரு முறை தனது தந்தையிடம் இதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு ஏவி மெய்யப்ப செட்டியார் ஒரு படம் இயக்கி அது தோல்வியடைந்தால் திரும்ப நான் நல்ல இயக்குனர் என்பதை நிரூபிக்க திரும்ப ஒரு படத்தினை இயக்க வேண்டும்.

இந்த மாதிரி நான் நேரத்தை செலவு செய்ய விரும்பவில்லை. இதே தயாரிப்பாளராக இருந்தால் படத்தினை தயாரித்தும் கொள்ளலாம் மேலும் படத்தில் கதைகளில் நாம் ஈடுபடவும் செய்யலாம் என கூறியுள்ளார் ஏவி. மெய்யப்ப செட்டியார். அதனால் இவர்கள் எந்தவொரு படங்களையும் இதுவரை இயக்கியது இல்லையாம்.

இதையும் வாசிங்க:விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.