Connect with us

Cinema News

ரஜினியே துரத்திவிட்டாரு!.. விஜய் சிக்குவாருன்னு நினைக்கிறீங்க.. விடாமுயற்சி செய்யும் அந்த இயக்குநர்!

பீட்சா, ஜிகர்தண்டா படங்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள் பெரிதாக ஓடவில்லை. ரஜினிகாந்த் உடன் இணைந்து அவர் இயக்கிய பேட்ட திரைப்படமே விஸ்வாசம் படத்துடன் கிளாஷ் விட்ட போது பலத்த அடி வாங்கியது.

அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு கார்த்திக் சுப்புராஜ் இரண்டு, மூன்று ஸ்க்ரிப்ட் சொல்லியும் அவருக்கு விருப்பமில்லை என துரத்தி விட்டதாக கார்த்திக் சுப்புராஜே நேர்காணலில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கடைசி 40 நிமிஷம் சூப்பர்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்க்கு தனுஷ் கொடுத்த விமர்சனம்.. ப்ளூ சட்டை கலாய்!..

தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் சியான் விக்ரமின் மகான் உள்ளிட்ட படங்களை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஃபர்னிச்சரை போட்டு உடைத்த நிலையில், எந்த பெரிய ஹீரோவும் அவரிடம் கதையை கேட்பதையே நிறுத்தி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால், தொடர்ந்து நடிகர் விஜய்க்கு கார்த்திக் சுப்புராஜ் கொக்கிப் போட்டு வருகிறார். லியோ படத்தின் பூஜையிலும் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்ட நிலையில், அடுத்த படத்தில் இணைவார்கள் என பார்த்தால் வெங்கட் பிரபுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய்.

இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

தளபதி 68 படத்தின் பூஜைக்கும் கார்த்திக் சுப்புராஜ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தொடர்ந்து நடிகர் விஜய்க்கான கதை தன்னிடம் தயாராக உள்ளது என்றும் அவரை இயக்க முயற்சித்து வருகிறேன் என பேட்டிகளில் கார்த்திக் சுப்புராஜ் பிட்டு போட்டு வருகிறார்.

மகான் படத்தை ஏன் ஓடிடியில் வெளியிட்ட என விஜய் திட்டிய நிலையில், கார்த்திக் சுப்புராஜ் வலையில் கூடிய சீக்கிரமே விஜய் சிக்குவாரா? அல்லது செதறி ஓடுவாரா என்பது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை பொறுத்துத்தான் இருக்கிறது என்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top