Cinema History
பராசக்தி படத்துக்கு வந்த பஞ்சாயத்து… கலங்கிய நடிகர் திலகம்!.. கடைசியில் நடந்தது இதுதான்!..
Sivaji Ganesan: ஏழு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பல கதாபாத்திரங்களிலும் நடித்து நாடக வட்டாரத்தில் சிவாஜி பிரபலமானார். சிவாஜியின் குருவாக இருந்தவர் பெருமாள் முதலியார். இவரை தனது தெய்வம் என சிவாஜி எப்போதும் சொல்வார். பராசக்தி எனும் நாடகத்தை சினிமாவாக எடுக்க நினைத்த பெருமாள் முதலியார், ஏவிஎம் நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை தயாரிக்க நினைத்தார்.
ஏவிஎம் நிறுவனத்திற்கும் இந்த கதை பிடித்துப்போக படத்தை தயாரிக்கும் வேலை துவங்கியது. ஆனால், சிவாஜிக்கு பதில் கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என ஏவிஎம் தரப்பு கூறியது. ஆனால், சிவாஜி நடித்தால் மட்டுமே இந்த படம் உருவாகும் என பெருமாள் முதலியார் சொல்லிவிட சிவாஜியே இப்படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: பராசக்தி படத்திற்கு சிவாஜி சம்பவளம் இவ்வளவுதானா?!. என்னடா நடிகர் திலகத்துக்கு வந்த சோதனை!…
படம் எடுக்கப்பட்டு சில காட்சிகளை பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் ‘சிவாஜி மிகவும் ஒல்லியாக இருக்கிறார். இந்த கதைக்கு அவர் செட் ஆக மாட்டார்’ என சொல்ல பெருமாள் முதலியார் ‘சிவாஜியை நன்றாக சாப்பிட வைத்து கொஞ்சம் வெயிட் போட வைக்கலாம். அவரே நடிக்கட்டும்’ என சொல்லிவிட்டார்.
படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற பகுத்தறிவு மற்றும் கடவுளுக்கு எதிராக வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாத்திக கருத்துக்களை கண்டித்து பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஒரு குரூப் தலைமை தணிக்கை குழு அதிகாரிக்கு கடிதமும் எழுதியது.
இதையும் படிங்க: காக்கானு சொல்லி இத்தன நாளா ஏமாத்திருக்காங்க! பராசக்தி படத்தின் ‘கா..கா..கா’ பாடலில் இருக்கும் ட்விஸ்ட்…
எனவே, இப்படத்திற்கு தடை வரலாம் எனவும் செய்திகள் வெளியானது. முதல் படமே இப்படியா என சிவாஜி கணேசன் அப்செட் ஆனார். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரி ‘இந்த படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள் எதுவும் இல்லை. படத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என சொல்லிவிட்டார்.
இந்த பஞ்சாயத்தே பராசக்தி படத்திற்கு பெரிய புரமோஷனாகவும் மாறிவிட, அப்படி என்ன இந்த படத்தில் இருக்கிறது என பலரும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்த்தனர். படமும் சூப்பர் ஹிட் அடித்த நல்ல வசூலை பெற்றது. இதனால் சிவாஜுக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் வந்தது. இப்படி முதல் படத்திலேயே நடிகர் திலகம் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக படம் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பின்னர் நடிப்பிற்கே இலக்கணமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பராசக்தி முதல் நாள் முதல் காட்சி.. தியேட்டரில் நடந்த மேஜிக்!. இப்படியெல்லாம் கூட நடக்குமா?!…