தன் பாட்டை தானே நம்பாத இசைப்புயல்!.. ஆனா இப்ப வரைக்கும் அவரோட பெஸ்ட்ல இது ஒன்னு!..

Published on: November 10, 2023
rahman
---Advertisement---

AR Rahman: தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக மாறியவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு முன் இளையராஜா உள்ளிட்ட சிலரிடம் வேலை செய்திருக்கிறார். மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ரஹ்மான் முதல் படமான ரோஜா படத்திலேயே இந்திய சினிமா அளவில் பிரபலமானார்.

முதல் படத்திற்காக தேசிய விருது வாங்கிய முதல் இசையமைப்பாளர் இவராகத்தான் இருப்பார். அதன்பின் ஜென்டில்மேன், காதல், இந்தியன், ஜீன்ஸ், திருடா திருடா என கலக்கி இளசுகளை தன்பக்கம் இழுத்தார். இவருக்கு இசைப்புயல் என்கிற பட்டமும் கிடைத்தது. அதிரடி வெஸ்டர்ன் இசையில் தெறிக்கவிட்டார்.

இதையும் படிங்க: ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள்!.. இந்தப் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

அப்படியே ஹிந்தி சினிமா பக்கமும் சென்று தனது கொடியை நாட்டினார். ரஹ்மானின் இசைக்கு நடனம் அமைக்க முடியாமல் அங்குள்ள நடன இயக்குனர்கள் திணறினார்கள். தமிழ், ஹிந்தி என மாறி மாறி இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை ரஹ்மான் கொடுத்தார்.

அப்படியே ஹாலிவுட் பக்கமும் போனார். ஹாலிவுட் இயக்குனர் மும்பை வந்து இயக்கிய ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்திற்கு இசையமைத்து 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்கொண்டு வந்தார் ரஹ்மான். ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, விக்ரம், சூர்யா என பலரின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: இசைஞானி கூட அத செய்யலையே!.. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

சூர்யாவின் நடிப்பில் உருவான சில்லுன்னு ஒரு காதல் படத்திற்கு இசையமைத்தபோது ‘அன்பே வா முன்பே வா’ பாடலை இசையமைத்தபோது இது மிகவும் சோகமாக இருக்கிறதே என ரஹ்மான் தயங்கியுள்ளார். ஆனால், இந்த பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என அப்படத்தின் இயக்குனர் கேட்டுக்கொண்ட பிறகே அந்த பாடலை முழுமையாக கம்போஸ் செய்துள்ளார்.

anbe vaa

ரஹ்மானின் இசை வாழ்வில் ஹிட் அடித்த பல பாடல்களில் இந்த பாடல் முகவும் முக்கியமானது. பலரின் ஃபேவரைட் பாடலாக இப்பாடல் இருக்கிறது. இந்த படம் வெளியாகி பல மாதங்கள் இந்த பாடலைத்தான் சூர்யா தனது ரிங் டோனாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் வாலியிடம் போட்ட கண்டிஷன்..வாலியோட ரியாக்‌ஷன் என்னனு தெரியுமா!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.