Cinema History
சிவாஜியை பார்த்ததும் மனநலம் பாதிக்கப்பட்டவரின் ரியாக்ஷன்! திக்குமுக்காட வைத்த சம்பவம்
Actor Sivaji Ganesan: தமிழ் திரையுலகில் சிவாஜி எப்பேற்பட்ட மாமேதை என அனைவருக்கும் தெரியும். நடிப்பு அரக்கன், நடிப்பு பல்கலைக் கழகம் என நடிப்பிற்கு எத்தனை அடைமொழிகள் இருந்தாலும் அத்தனைக்கும் சொந்தக்காரர் சிவாஜிதான்.
இவர் நடித்த படங்கள் எல்லாமே ஒரு பாடம்தான். அந்த பாடத்தை படித்தால் போதும் சினிமாவில் சாதித்து விட முடியும். ஒரு கருவூலமாகவே சிவாஜியை அனைவரும் பார்க்கிறார்கள். அவரின் நியாபகங்கள், அவர் நடித்த படங்கள் எல்லாமே காலங்காலமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
இதையும் படிங்க: கமல் – மணிரத்னம் ‘தக் லைப்’ படத்தின் கதை இதுதானா? – ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
இந்த நிலையில் திரைத்துறையில் மிகவும் புகழ் வாய்ந்த தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் முக்தா ஸ்ரீனிவாசன் திகழ்ந்து வந்தார். இவர் தயாரிப்பில் நாயகன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதுமட்டுமில்லாமம் ஜெயலலிதாவின் 100வது படமான சூரிய காந்தி படத்தை இயக்கியவரும் இவர்தான்.
ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்களை வைத்து பல நல்ல நல்ல படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் முக்தா ஸ்ரீனிவாசனின் மகள் சிவாஜியை பற்றி சில சுவாரஸ்ய தகவலை ஒரு பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: என்னது மாயா உண்மையிலேயே அப்படித்தானா? லோகேஷ் கொடுத்த டிவிஸ்ட் – இத நாங்க எப்படி எடுத்துக்கிறது?
முக்தா ஸ்ரீனிவாசனின் மூத்த மகள் திருமணத்திற்கு சிவாஜி அழைக்கப்பட்டார். திருச்சி அருகில் இருக்கும் ஒர் ஊரில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு கோயிலில்தான் திருமணம். கோயிலை சுற்றி பல வீடுகள் வரிசையாக இருக்குமாம்.
திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் அந்த வீட்டில்தான் தங்குவார்களாம். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டின் திண்ணைகளில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களும் உட்கார்ந்திருப்பார்களாம். அப்போது சிவாஜி வருவதை அறிந்த அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சிவாஜியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
இதையும் படிங்க: ஏற்கனவே நேரம் சரியில்லை.. இதுல இது வேறையா.. அறிவிக்கப்பட்ட இளையராஜா பியோபிக்.. ஹீரோ இவர்தானா..?
உடனே முக்தா ஸ்ரீனிவாசனின் அண்ணன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் சிவாஜியை காட்டி ‘இவர் யாருனு தெரியுமா?’ என கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ‘இவர்தான் சிவாஜி’ என பதில் கூறியிருக்கிறார். இதை பார்த்த அனைவரும் மெய்சிலிர்த்துவிட்டார்களாம். தன்னிலை மறந்தவர்களால் கூட சிவாஜியை மறக்க முடியாது என்பதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம்.