Connect with us

Cinema History

டாக்டர் ஓகே சொன்ன பிறகு ஷூட்டிங் வந்த நடிகர்!.. தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரின் நல்ல மனசு!..

MGR: தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் மனசு சொக்க தங்கம். அப்படி ஒரு லிஸ்டில் முதலிடம் கண்டிப்பாக எம்.ஜி.ஆருக்கு தான். அவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக இருக்கும் போது இன்னமும் தன் படக்குழு மீது அதிக கவனம் செலுத்தினாராம்.

நடிப்பில் மட்டுமல்லாது எம்.ஜி.ஆர் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார். அப்படி அடிமைப்பெண் ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர் படக்குழுவிற்கு என்ன செய்தார் என்பதை சோ ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: வேற படமா வெளிவந்த விஜயகாந்தின் ‘அக்கா புருஷன்’ – இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

அடிமைப்பெண் படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து கொண்டு இருந்தது. மொத்த யூனிட்டும் 15 நாட்கள் அங்கையே தங்கி இருந்தார்களாம். நடிகர்களில் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை என்ன தேவை என்பதை நேரடியாகவே கேட்பாராம் எம்.ஜி.ஆர்.

இப்படி ஒரு விஷயத்தினை அப்போதைய தயாரிப்பாளர் யாருமே செய்தது இல்லையாம். தங்கும் இடம், சாப்பாடு எல்லாம் திருப்தியா இருக்கா? எந்த பிரச்னை இல்லையா என்பதை அவ்வப்போது அவரே நேரில் வந்து பார்த்து கவனித்துக் கொள்வாராம்.

இதையும் படிங்க: புருஷனுக்காக களத்தில் இறங்கிய மீனா… முத்து இப்பையாது புரிஞ்சிக்கோப்பா.. சிக்கப்போகும் சத்யா?

இப்படி ஒரு முறை சோவிற்கு படப்பிடிப்பில் ஒரு சில நாட்கள் கடும் வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் படப்பிடிப்பு போனால் கூட பரவாயில்லை. நீங்க ரெஸ்ட் எடுங்க என்பதை எம்.ஜி.ஆரே வலியுறுத்தினாராம். தொடர்ந்து அவர் கொஞ்சம் சரியானதும் படப்பிடிப்புக்கு வரேன் எனக் கூறி இருக்கிறார்.

உடனே தன்னுடைய ஆஸ்தான மருத்துவரை அனுப்பி நேரடியாக செக் செய்து ஆர் ஓகே எனக் கூறிய பின்னரே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதித்து இருக்கிறார். அதே சமயத்தில் சென்னையில் ஒரு வழக்கில் சோ ஆஜாராக வேண்டியதாக இருந்ததாம். இதனால் அவரின் காட்சிகளை முதலில் முடித்து அனுப்புமாறு இயக்குனருக்கு கூறி இருக்கிறார். அதுப்போல எல்லாருக்கும் முன்னால் சோ காட்சிகள் முடிக்கப்பட்டு அனுப்பப்பட்டாராம். 

google news
Continue Reading

More in Cinema History

To Top