இவ்வளவு கஷ்டப்பட்டும் வீணாப்போச்சே!.. பல கோடி கடன்!. வெளிவருமா விக்ரம் படம்!..

Published on: November 15, 2023
vikram
---Advertisement---

Actor vikram: தமிழ் சினிமாவில் நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடியவர் விக்ரம். துவக்கத்தில் இவர் நடித்த படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, அப்பாஸ், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்தார். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் அவருக்கு பாலா இயக்கிய சேது படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட விக்ரம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் தில், தூள், சாமி என ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். பல வெற்றிப்படங்களிலும் நடித்திருக்கிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வம் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரை களமிறக்கும் முருகதாஸ்!.. பக்காமாஸ் ஆக்‌ஷன் விருந்தாக உருவாகும் எஸ்.கே 23!..

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ராதிகா, சிம்ரன், பார்த்திபன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை கவுதம் மேனனே தயாரித்தார். இங்குதான் ஏழரை துவங்கியது. பணப்பிரச்சனையில் 70 சதவீதம் அடம் முடிந்து அப்படியே நின்றது.

இந்த படம் 4 வருடங்களுக்கு முன்பு துவங்கியது. இப்படத்தை எடுப்பதற்காக கவுதம் மேனன் நடிகராக மாறி பல படங்களிலும் நடித்தார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இப்பட வேலைகளை மீண்டும் துவங்கினார். வேலைகள் வேகமாக நடந்தது. டப்பிங் பணிகளும் முடிந்து படம் தயாரானது.

இதையும் படிங்க: 4 நாள்ல ஜப்பான் கதை கந்தல்!.. ஜிகர்தண்டா நிலைமை படுமோசம்.. இதுலாம் தீபாவளி வின்னரா?

அதோடு, இந்த மாதம் 24ம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவித்தும் விட்டனர். சுமார் ரூ.60 கோடி வரை பணம் செட்டில் செய்ய வேண்டியுள்ளது. ரிலீஸ் தேதிக்குள் பணத்தை எப்படியும் ரெடி பண்ணி கொடுத்துவிடலாம் என கவுதம் மேனன் நம்பியுள்ளார். ஆனால், இப்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, திட்டமிட்டபடி துருவ நட்சத்திரம் 24ம் தேதி வெளியாகுமா என்பது தெரியவில்லை. இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சூர்யாதான். ஆனால், அவர் விலகவே அவருக்கு பதில் விக்ரமை வைத்து கவுதம் மேனன் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் அட்லியை பங்கமாக கலாய்த்த அஜித்!.. அட ஒரே பப்பி ஷேமா போச்சே!..

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.