விஜய் ஷாருக்கான விட இவர்தான் எனக்கு ரொம்ப முக்கியம்… என்னப்பா அட்லி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட!…

Published on: November 19, 2023
director atlee
---Advertisement---

Director atlee: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராய வலம் வருபவர் அட்லீ. மிகக்குறைந்த அளவு படங்களையே இயக்கியிருந்தாலும் தனது திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் தெறி, பிகில், மெர்சல் போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். இப்படங்களும் இவருக்கு வெற்றியை தேடி தந்தன.

இதையும் வாசிங்க:இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷை கனகராஜை சீண்டும் சந்தானம்!..

இப்படத்திற்கு பின் இவர் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் இவர் மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளார்.

இவரின் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் வரும் போது பல வித எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்துள்ளார். பல நெகட்டிவ் கமெண்ட்களையே சந்தித்துள்ளார். ஆனால் இவை எதையுமே கண்டுகொள்ளாத அட்லீ தனது விடாமுயற்சியினால் இன்று முன்னணி இயக்குனராய் ஜொலிக்கின்றார்.

இதையும் வாசிங்க:இந்த பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது!. போய் வேலைய பாருங்கடா!. மன்சூர் அலிகான் காட்டம்…

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வளர்ச்சிக்கு சினிமா துறையை விட தனது தாயின் முயற்சியே அதிகம் எனவும், தான் தனது வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் தன்னை அவ்வளவு செல்லமாக பார்த்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது வளர்ச்சியில் மிக பெரிய அளவில் சந்தோஷம் படும் ஒரே நபர் தனது அம்மாதான் எனவும் தெரிவித்திருந்தார். தனது அம்மாவின் சிறு உலகத்துக்குள் இருக்கும் அனைவரிடமும் தன்னை விட்டு கொடுக்காமல் பார்த்து கொண்டதாகவும், மேலும் ஷாருக்கான் விஜய் போன்ற பல நட்சத்திரங்களை சினிமாவில் ஜொலிக்க வைத்ததை விட தனது தாயை சூப்பர் ஸ்டாராக ஆக்கியதில்தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:பரபரப்பாகும் லேடி சூப்பர்ஸ்டார்… கணவரின் ஆர்டர் தான் காரணமா? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.