அனிருத்த மைண்ட்ல வச்சு எடுத்தப் படம்தான் இது! பாட்டு போட்டாலும் ஹிட் – இவர நினைச்சு எடுத்த படமும் ஹிட்டா?

Published on: November 20, 2023
aniruth
---Advertisement---

Musi Director Aniruth: இசைத்துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்துவரும் ஒரு ராக் ஸ்டாராக இருந்து  வருகிறார் அனிருத். மூணு என்ற படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் இன்று பெரிய பெரிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இல்லாத  பாடல்களை பார்க்க முடிவதில்லை.

நடிகர்களின் கால்ஷீட் கிடைக்கிறதோ இல்லையோ அனிருத்தின் கால்ஷீட்டிற்காக பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னதாக இளையராஜாவிற்குத்தான் இப்படி ஒரு நிலைமை இருந்தது. அவரின் கால்ஷீட்டிற்காக பல முன்னனி இயக்குனர்கள் காத்திருந்த காலங்கள் ஏராளம்.

இதையும் படிங்க: ஃபன்னி கய்ஸ்!. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உண்மையான வசூல் இதுதான்!.. முகத்திரையை கிழித்த பிரபலம்!..

அதை இப்போது அனிருத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அனிருத்தை படங்களில் நடிக்க வைக்க ஏகப்பட்ட முயற்சிகள் நடந்தன. ஆனால் நடிப்பில் தன் கவனத்தை திருப்பவே இல்லை அனிருத். ஆனால் அவரை நினைத்து கதை எழுதிய ஒரு இயக்குனர் இருந்திருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை. டாடா பட இயக்குனரான கணேஷ்தான். மிகச்சிறிய பட்ஜெட்டில் பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படம்தான் டாடா. இந்தப் படத்தில் கவின் மற்றும் அபர்ணா லீடு ரோலில் நடித்திருந்தனர். மிகவும் எதார்த்தமான கதையில் அமைந்த இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தியது.

இதையும் படிங்க: சார் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க!.. பல வருடங்களாக லோகேஷ் ஃபாலோ பண்ணும் செண்டிமெண்ட்!..

இந்தப் படத்தை எடுத்த இயக்குனர் கணேஷ் முதலில் அனிருத்தை மனதில் வைத்துதான் இந்த கதையை எழுதினாராம். அதாவது அனிருத் மாதிரி ஒரு இளம் வயது கொண்ட நபர் எப்படி சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலையை தாங்குகிறார் என்பது மாதிரி யோசித்து எழுதியதுதான் இந்த டாடா கதை என்று கணேஷ் கூறினார்.

அதனால் அனிருத் மாதிரி இருக்கிற நடிகரை தேடும் போது கவின் கண்முன் தோன்றினார். ஏற்கனவே கவினும் கணேஷும் நண்பர்களாம். கதையை சொன்னதும் கவினுக்கு மிகவும் பிடித்துப் போக அதன்பிறகு அபர்ணாவுக்கு சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் கமலை வச்சி எடுத்த படத்துக்கு இளையராஜா இசை!.. பல வருஷம் கழிச்சி ஷங்கர் பகிர்ந்த சீக்ரெட்!..

அவருக்கும் கதை பிடித்துப் போக அதன் பிறகே படப்பிடிப்பு ஆரம்பமானது என இயக்குனர் கணேஷ் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.