Connect with us

Cinema News

அமீர் சொல்றது தான் உண்மை!.. ஞானவேல் ராஜா சொல்றது பொய்.. சாட்சிக்கு வந்த சசிகுமார்!..

சினிமாவில் நாலாபுறமும் தற்போது பஞ்சாயத்து வாரம் போலத்தான் தெரிகிறது. ஒரு பக்கம் திரிஷா – மன்சூர் அலி கான் சர்ச்சை ஒரு வாரத்துக்கு பிறகு ஓய்ந்துள்ளது. மறுபுறம் சீனுராமசாமி – மனிஷா பிரச்சனை, விசித்ரா – பாலகிருஷ்ணா சர்ச்சை என கிளம்பி வரும் நிலையில், கட்டப்பஞ்சாயத்து கச்சேரியும் களைகட்டியுள்ளது.

நடிகர் கார்த்தியை ஹீரோவாக்கி முதல் படத்திலேயே அவருக்கு பெரிய அங்கீகாரத்தையும் கொடுத்த அமீரை பல ஆண்டுகளாக அசிங்கப்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்த சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது.

இதையும் படிங்க: மனிஷா யாதவ் மட்டுமல்ல!.. பிந்து மாதவிக்கும் ரூட் போட்ட சீனு ராமசாமி?.. அடுத்த பூகம்பம் ஸ்டார்ட்?..

ஞானவேல் ராஜா அமீர் மீது தான் அனைத்து தவறும் இருக்கிறது என்றும் அதனால் தான் கார்த்திக்கும் அவருக்கும் பிரச்சனை என சொல்லி வரும் நிலையில், அமீர் அண்ணன் மீது எந்தவொரு தப்பும் இல்லை எல்லாத்துக்கும் ஞானவேல் ராஜா தான் காரணம் என இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தற்போது சப்போர்ட்டுக்கு வந்து விட்டார்.

பருத்திவீரன் படத்தை எடுத்து முடிக்க கடைசியாக அமீருக்கு நான் தான் பணத்தை கடனாக கொடுத்தேன் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களுக்கான பணத்தை செட்டில் செய்யாமலேயே அந்த படத்தை வெளியிட்டது தான் பிரச்சனை ஏற்படவே காரணம் என பல வருஷ உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் சசிகுமார்.

இதையும் படிங்க: சிரிப்பே வரல சந்தானம்.. சாவு வீட்ல டாவு கேட்குதா?.. 80ஸ் பில்டப் விமர்சனம் இதோ!..

இயக்குனர் அமீருக்கு சூர்யா மற்றும் கார்த்தி குடும்பம் பல ஆண்டுகளாக கொடுமை கொடுத்து வந்ததாகவும் அந்த பிரச்சனை காரணமாகவே அமீர் தொடர்ந்து கார்த்தியை சந்தித்து பேசுவதை கூட தவிர்த்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top