Cinema News
சிவக்குமார் நடிப்பிற்கு முழுக்கு போட காரணமே அந்த நடிகைதான்!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..
Actor Sivakumar: சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு கலைஞரும் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில்தான் வருவார்கள். ஆனால் அவர்கள் ஹீரோவாவதும் வில்லனாவதும் அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்துதான அமையும்.
அப்படி வந்த நடிகர்களில் சிவக்குமாரும் ஒருவர். 60களில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த சிவக்குமார் முதலில் தம்பி, மகன் போன்ற கதாபாத்திரங்களில்தான் கெரியரை ஆரம்பித்தார். அப்படி ஏராளமான படங்களில் நடித்த சிவக்குமார் 80களுக்கு பிறகுதான் ஹீரோவானார்.
கவிக்குயில், அக்னி சாட்சி, பத்ரகாளி, கந்தன் கருணை, வண்டிச்சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அன்னக்கிளி போன்ற திரைப்படங்கள் சிவக்குமார் சினிமா கெரியரில் மறக்க முடியாத திரைப்படமாக மாறியது. அதிலும் குறிப்பாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் இவரை மேலும் பிரபலப்படுத்தியது.
இதையும் படிங்க: அந்த நடிகரை அடைய முயற்சி செய்து முடியாமல் போன விசித்ரா! அவதூறு சொன்னதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
சொக்கத்தங்கம் என்று ஒரு நடிகரை குறிப்பிட வேண்டுமானால் கண்டிப்பாக சிவக்குமாரை சொல்லலாம்.எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத நடிகராகத்தான் வலம் வந்தார். படங்களிலும் அப்படித்தான் நடித்தார்.
கதைக்கு தேவைப்படும் என்ற மாத்திரத்தில் மட்டுமே அப்படியாக நடித்திருப்பார். பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி படம் இவரை மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றது. 90களுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு ஒரு சில சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் திடீரென சினிமாவை விட்டு விலகிய சிவக்குமார் ஏன் விலகினார் என்ற காரணத்தை பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: நிக்சனையே காஜின்னு சொன்னாங்க!.. இந்தி பிக் பாஸ்ல இப்படி பாயுறானே.. இங்கேயும் விரைவில் எதிர்பார்க்கலாமோ?..
ஒரு சீரியலில் உணர்ச்சிப் பொங்க நடித்துக் கொண்டிருந்தாராம் சிவக்குமார். அவருக்கு 10 அடி தூரத்தில் அதே சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் டெலிபோனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தாராம். உடனே சிவக்குமார் ‘ஏன்ம்மா இவ்வளவு உணர்ச்சிப் பொங்க வசனத்தை சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி கத்தி பேசலாமா?’ என கேட்டாராம்.
அதற்கு அந்த நடிகை ‘மன்னிக்கவும்’ எனக் கூறி கொஞ்சம் தள்ளிப் போய் பேசியிருந்தால் அது பக்குவம். ஆனால் அதை செய்யாமல் அந்த நடிகை சிவக்குமாரை பார்த்து ‘என்ன சார் நீங்க? இவ்வளவு காலம் சினிமாவில் நடிக்கிறீர்கள். இது கூட தெரியாமல் இருக்கிறீர்கள். எப்படியும் டப்பிங் இருக்கும். அதில் சரியாக பேசி நடித்திருக்கலாமே’ எனக் கூறி மீண்டும் டெலிபோனில் பேச்சை தொடர்ந்தாராம்.
இந்த சம்பவம்தான் இனி சினிமாவிலும் சரி சீரியலிலும் சரி நடிக்கவே கூடாது என்ற முடிவை சிவக்குமார் எடுக்க காரணமாக அமைந்தது என சித்ரா லட்சுமணன் கூறினார். அந்த கால சினிமா எந்தளவு டெடிகேஷனாக இருந்தது? ஆனால் இன்றைய சினிமா அப்படி இல்லை என நினைத்துதான் சிவக்குமார் விலகினார் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க: பெரிய ஹீரோ படம்! 4 நாள் நடிச்சேன்! பாத்தா என்னை தூக்கிட்டாங்க – மஹிமா சொன்ன படம் எதுனு தெரியுமா