Connect with us
vichi

Biggboss Tamil 7

அந்த நடிகரை அடைய முயற்சி செய்து முடியாமல் போன விசித்ரா! அவதூறு சொன்னதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?

Actress Vichithra: க்ளாமர் ரோலுக்கு என்று பேர் போனவர் நடிகை விசித்ரா. ஏராளமான படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆடி புகழ் பெற்றவர். இதனால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அவர் நடித்த படங்களில் மறக்க முடியாத படமாக முத்து திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக விசித்ரா நடித்திருந்தார். ஆனால் திடீரென நடிப்பிற்கு முழுக்கு போட்ட விசித்ரா திருமணமாகி செட்டிலாகி விட்டார்.

கணவர்,குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த விசித்ரா சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை மேலும் பிரபலமாக்கியது. அதில் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து சீரியலிலும் நடித்தார்.

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட விசித்ரா விரைவில் எவிக்ட் ஆகி வெளியேறிவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரையும் பந்தாடி இப்போது ஒவ்வொரு வாரமும் வோட்டிங்கில் முதலிடத்தை பெற்று 50 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து நிலைத்து வருகிறார்.

இதையும் படிங்க: பெரிய ஹீரோ படம்! 4 நாள் நடிச்சேன்! பாத்தா என்னை தூக்கிட்டாங்க – மஹிமா சொன்ன படம் எதுனு தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனின் ஃபைனலிஸ்டில் ஒருவராக விசித்ரா இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்த ஒரு நிகழ்வை கூறும் டாஸ்க்கில் விசித்ரா ஒரு நடிகரை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் ரீதியாக தனக்கு அந்த நடிகர் மூலமாக அழைப்பு வந்தது என குறிப்பிட்டிருந்தார். அது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் தான் என அனைவரும் இணையத்தில் கூறிவந்தனர். இந்த நிலையில் பிரபல திரை விமர்சகரும் அரசியல் விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்தார்.

அதாவது சினிமாவில் முத்தக்காட்சி, ரேப் காட்சி என அனைத்தும் வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது. இன்னும் அதில் மீதம் என்ன இருக்கிறது. இதில் எல்லாம் நடித்து அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று சொல்வதெல்லாம் அபத்தம் என்று காந்தராஜ் கூறினார்.

இதையும் படிங்க: யோகிபாபுவுக்கு அடுத்த மண்டேலாவா குய்கோ?.. பிரபல விமர்சகர் என்ன சொல்றார் பாருங்க!..

அதுமட்டுமில்லாமல் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் ஹோட்டலில் ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்தாராம். அவருக்கு அடுத்து இரண்டு டேபிள் தள்ளி ஒரு பெண் உட்கார்ந்திருந்தாராம். திடீரென அந்த பெண் ஹோட்டல் மேனேஜரிடம் ‘அந்த நடிகர் என்னை தொந்தரவு செய்கிறார்’ என கூறினாராம்.

உடனே அந்த மேனேஜர் அந்த நடிகரிடம் போய் கேட்க நான் எதுவுமே செய்யவில்லையே. அந்த பெண்ணையும் பார்க்கவில்லையே என்று கூறியிருக்கிறார். இதை அந்த பெண்ணிடம் கேட்க ‘ஆமாம் அவர் எதுவும் செய்யாததுதான் எனக்கு தொந்தரவாக இருக்கிறது’ என கூறினாராம்.

இந்த சம்பவத்தை வைத்து காந்தராஜ் ‘ஒரு வேளை பாலகிருஷ்ணாவை அடைய விசித்ரா முயற்சி செய்து  முடியாமல் போயிருக்கலாம். அதனால் கூட அவர் மீது வீண் பழி போட்டிருக்கலாம்’ என கூறினார். அந்த காலத்தில் பாலகிருஷ்ணாவுக்கு எத்தனை பெண் ரசிகைகள் இருந்தார்கள் தெரியுமா? அந்தளவுக்கு ஆணழகனாக இருந்தார் பாலகிருஷ்ணன். அதனால்தான் விசித்ரா இப்படி சொல்லியிருப்பார் என காந்தராஜ் கூறினார்.

இதையும் படிங்க: உன்ன பாத்தாலே மனசு கெட்டு போகும்!. ஸ்லிம் பியூட்டியை காட்டி இழுக்கும் கீர்த்தி…

Continue Reading

More in Biggboss Tamil 7

To Top