Connect with us
vijay

Cinema News

தளபதியால ஹிட்தான் கொடுக்க முடியும்! ஆனால் வாழ்க்கை கொடுத்தது இவரு – அட்லீயின் வெற்றிக்கு காரணமான அந்த நடிகர்

Director Atlee: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் அட்லீ. ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து விஜயை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து ஒரு பெரிய அந்தஸ்த்தை பெற்ற இயக்குனராக மாறினார் அட்லீ.

இப்போது பாலிவுட்டிலும் தடம் பதித்தார். ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்ததன் மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக உருவாகியிருக்கிறார் அட்லீ. மீண்டும் பாலிவுட்டில் படம் எடுக்க இவரை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..

அட்லீயின் வெற்றிக்கு காரணமாக விஜயின் பங்கும் இருப்பதாக கோலிவுட்டில் பரவலான கருத்து இருந்து வருகிறது. விஜய் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் போயிருந்தால் அட்லீயை இந்தளவு கொண்டாடியிருக்க மாட்டோம் என்றுதான் கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் அட்லீ பேசிய ஒரு பழைய வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது அட்லீயின் வெற்றிக்கு ஒரு அங்கமாக இருந்தது சிவகார்த்திகேயன்தான் என்று கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் அட்லீயின் நண்பரும் ஆவாராம்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் கொடுத்த புது ட்விஸ்டு…! எனக்கு இல்ல எண்ட்டு..! பேசிய எல்லாருக்கும் நோட்டீஸ் உண்டு..!

முதன் முதலில் கதை சொல்ல அட்லீயை அறிமுகப்படுத்தியது சிவகாத்திகேயன்தானாம். சிவகார்த்திகேயன் ஆங்கராக இருந்த சமயம் அட்லீ ஷங்கரிடம் உதவியாளராக இருந்தாராம். இரவு நேரங்களில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம்.

அப்போது சிவகார்த்திகேயனிடம் அட்லீ ‘உனக்காக ஒரு செமயான காமெடி கலந்த கதை என்னிடம் இருக்கிறது’ என்று சொன்னாராம். சில மாதங்கள் கழித்து அதே அட்லீ சிவகார்த்திகேயனிடம் ‘ நீ ஒரு ஹீரோ மெட்டிரியல்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘அட போப்பா.. காமெடிக்கே என்னை கூப்பிட மாட்டார்கள். நீ வேற’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: ஜெமினி கணேசன் படத்துக்கு சம்பளத்தை குறைக்க சொன்ன என்.டி.ராமராவ்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…

அதன் பிறகு மகேந்திரனிடம் அட்லீயை அழைத்துக் கொண்டு ‘இவர் நல்ல கதை ஒன்று வைத்திருக்கிறார். என் நண்பன் என்பதையும் தாண்டி இவரிடம் திறமை இருக்கிறது’ என சொல்லி சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்து வைத்தாராம். அதிலிருந்துதான் அட்லீயின் திரைப்பயணம் ஆரம்பித்ததாம். இதை மிகவும் பெருமையாக அட்லீ அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top